பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படுகிறது.
கோவையைச் சேர்ந்த ஓவியர் யு. எம்.டி.ராஜா. 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு மெமரி கார்டுகளில் பொங்கல் பண்டிகை ஓவியம் வரைந்திருக்கிறார்.
பாரம்பரியம், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை வணங்கும் விதமாகவும் இந்த ஓவியத்தை வரைந்த ராஜா, இரண்டு நாட்கள் இதற்காக செலவழித்ததாக தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/NeaFw53yB6qtw6ATat6q.jpeg)
700 மில்லி கிராம் தங்க துகள்களை நுணுக்கமாக எடுத்து, பொங்கல் பானை முன் சூரியனை வழிபட்டு மாடுகள் நிற்பது போன்றும், தை பொங்கல் கொண்டாடும் உழவர், கையில் ஏர் கலப்பையுடன் கரும்பு, மாடுகளுடன் நிற்பது போன்றும், காளையர்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்றும் இந்த தங்க ஓவியம் வடித்து இருக்கின்றார் ஓவியர் ராஜா.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“