/indian-express-tamil/media/media_files/2025/02/06/AlIqXdzvaTKlLaKMOrCc.jpg)
தைப்பூசம் சிறப்பு வழிபாடு
முருக பெருமானுக்கு இருக்க கூடிய சக்திவாய்ந்த விரதங்களில் தைப்பூசம் விரதமும் ஒன்றாகும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 2025 தைப்பூசமானது, பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. பூசம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் – பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று மாலை 06:01 மணிக்கு தொடங்குகிறது.
பூசம் நட்சத்திரம் முடிவடையும் நேரம் – பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று மாலை 06:34 மணிக்கு முடிவடைகிறது. எனவே பூச நட்சத்திரம் தொடங்கி முடிவடையும் நேரத்திற்குள் தைப்பூச வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது என்றும் மேலும் அந்நாளில் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் பற்றி தேச மங்கையர்க்கரசி தனது யூடியூப் பக்கமான ஆடம் ஞான மையத்தில் கூறியிருப்பதாவது,
தைப்பூசம் 2025 - விரத முறை, வழிபாட்டு முறை & நேரம் | வள்ளலாரின் வழிபாட்டு முறை | Thaipusam 2025
வழிபடும் நேரம்: தைப்பூசத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனை வழிபாடு செய்ய வேண்டும். முருகன் கோவிலில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். எனவே காலையில் குளித்து பூஜைகள் செய்யலாம். மாலை 6 மனிக்கு முருகனுக்கு நெய்வேதியம் படைத்து வழிபடலாம்.
வழிபடும் முறை: காலையில் எழுந்து தலை குளித்து விட்டு முருகன் படத்துக்கு மாலை அணிவித்து முடிந்த அளவிற்கு சிவப்பு நிற மாலை அணிவிக்கலாம். இல்லை என்றால் வேறு எந்த நிறத்திலும் அணிவித்து வழிபடலாம். சிலை இருந்தால் பால் அபிஷேகம் செய்யலாம். இல்லை என்றால் ஒரு டம்ளர் பால் வைத்து வழிபடலாம்.
தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் 48 நாள் விரதமிருந்து மாலை அணிந்து கோயில் செல்வார்கள். ஆனால் பலர் தைப்பூசம் அன்று விரதம் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் அன்று நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விரதம் மேற்கொள்ளலாம்.
முடியாதவர்கள் பழம், பால் போன்றவற்றை சாப்பிட்டு விரத்தத்தை தொடங்கலாம். அன்றைய நாளில் முருகனுக்கு உகந்த பாடல்களை பாடலாம். காலையில் விரதத்தை தொடங்கி மாலை சாமி கும்பிட்ட பின் விரதத்தை முடிக்கலாம்.
முருகனுக்கு நெய்வேதியமாக ஏதாவது ஒரு இனிப்பு படைத்து வழிபடலாம். குழந்தைகளுக்காக காத்து இருப்பவர்கள் விரஹ்டம் இருக்கலாம். கடன் தொல்லை, கல்யாணம் என பல பிரச்சனை உள்ளவர்களும் தை பூசம் அன்று விரதம் இருந்து வழிபடலாம்.
குறிப்பாக வீட்டில் சாமி கும்பிட்டு விரதம் முடிப்பவர்கள் எளிமையாக பால் அபிஷேகம் செய்யலாம். இல்லை என்றால் ஒரு டம்ளர் பால், இனிப்பு வைத்து படைக்கலாம். சிவப்பு நிற மலர்கள் முருகனுக்கு சூட்டி வழிபடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.