முருக பெருமானை வணங்குவதற்கு அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள் தான். எனினும், வைகாசி விசாகம், ஐப்பசி சஷ்டி திருநாள், கார்த்திகை திருநாள், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை முருகனுக்கு பிடித்தமான நாட்களாக கருதப்படுகின்றன என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாட்களில் முருக பெருமான் ஆலயங்களில் சிறப்பான வழிபாடு நடத்தப்படும். தைப்பூச திருநாளை முன்னிட்டு முருக பெருமான் பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரை செல்வார்கள். காவடி எடுக்கக் கூடிய முருக பக்தர்களை எந்த தீய சக்தியும் அண்டாது என நம்பப்படுகிறது என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
முருக பெருமான வணங்கினால், அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அசுரர்களை அழிப்பதற்காக பார்வதி தேவி தன்னுடைய சக்திகளை எல்லாம் திரட்டி, சக்திவேல் வடிவத்தில் முருகனுக்கு வழங்கினார். அந்த சக்திவேலை கொண்டு இந்த உலகத்தை அச்சுறுத்திய அசுரர்களை முருகன் அழித்தார்.
இந்த தைப்பூச திருநாளில் தான் வள்ளியை, முருகன் மணந்தார். பூச நட்சத்திரம் என்பது ஞான குருவாகிய குருபகவானுக்கு உகந்தது. எனவே, இந்த தைப்பூச நாளில் சிவபெருமான், முருக பெருமான், பராசக்தியுடன் ஞான குருவையும் வழங்கினால் நமக்கு ஞானம் பெருகும் என்று அனிதா குப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.
தைப்பூசம் நாளில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க தொடங்கலாம். இந்த தைப்பூச நாளில் நம் முன்னோர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்தினர். எனவே, இந்த நாளில் ஆலயம், இல்லம் என எந்த இடமாக இருந்தாலும் முருகனை வணங்க வேண்டும். அதன்படி, அன்றைய தினம் தலைக்கு நீராடி, வீட்டை சுத்தப்படுத்தி, வாசலில் கோலம் போட்டு, நிலை வாசல் கதவிற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு, மாவிலை தோரணம் கட்டி, விளக்கு ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்.
குறிப்பாக, அன்றைய தினம் நமது பூஜை அறையில் வேல் வழிபாடு மேற்கொள்ளலாம். இது கூடுதல் பலனை தரும் என்று அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் காலை குளித்த பின்னர் திரவ பொருளான பால், இளநீர், மோர், ஜூஸ் அல்லது காபி ஏதாவது இன்றை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் உணவருந்தக் கூடாது.
இந்த விரதம் இருப்பவர்கள் மனதில் வேண்டுதலுடன் மேற்கொள்ளலாம். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டும் என நினைப்பவர்கள் முருகனுக்கு வேண்டுதல் வைக்கலாம். முருக பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக திகழ்கிறார். அதன்படி, நிலம், வேலை, குழந்தை தொடர்பான வேண்டுதல்களை முருக பெருமானிடம் வேண்டலாம் என அனிதா குப்புசாமி அறிவுறுத்துகிறார்.இந்த வேண்டுதலுக்கு முருகன் செவி சாய்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருகனுக்கு மதிய நேரத்தில் சில பொருட்களை நைவேத்யம் வைத்து வழிபடலாம் என அனிதா குப்புசாமி அறிவுறுத்துகிறார். பஞ்சாமிர்தம், இனிப்பு பொங்கல், பால் பாயாசம், வாழைப்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைக்கலாம். சித்ரான்னம், பருப்பு நெய் சேர்த்து சமைத்த உணவுகள், பொரி உருண்டை போன்றவற்றையும் முருகனுக்கு படைத்து வழிபடலாம். மேலும், கந்த சஷ்டி மற்று முருகன் பாடல்களை பாடி வழிபடலாம்.
நன்றி - Anitha Pushpavanam Kuppusamy - Viha Youtube Channel