தாய்லாந்தில் இலவச விமானப் பயணம்: மலிவு விலையில் சுற்றுலா செல்ல சூப்பர் வாய்ப்பு!

தாய்லாந்து இந்தியப் பயணிகளுக்கு இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாய்லாந்து இந்தியப் பயணிகளுக்கு இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
free domestic flight tickets

This country is offering free domestic flight tickets to Indians. Here’s everything you need to know

ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும் போது, பயணச் செலவுகள் பெரும்பாலும் நமது பட்ஜெட்டின் பெரும் பகுதியை விழுங்கிவிடுகின்றன. இதனால், பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தில் சில இடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், ஒருவேளை அந்த நாட்டிற்குள் விமானப் பயணம் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? இந்த கனவு விரைவில் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு நனவாகலாம். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பார்வையாளர்களுக்கு, உள்நாட்டு இடங்களை எந்த கூடுதல் செலவுமின்றி சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு புதிய சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது.

திட்டம் என்ன?

Advertisment

தாய்லாந்து சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம், "சர்வதேச டிக்கெட் வாங்கு, தாய்லாந்து உள்நாட்டு விமானம் இலவசம்" (Buy International, Free Thailand Domestic Flights) என்ற ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பயணிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

நீங்கள் ஏர்லைன்ஸ் இணையதளங்கள், பல நகரங்களுக்கான டிக்கெட்டுகள், ஃப்ளை த்ரூ (Fly-thru) சேவைகள் அல்லது ஆன்லைன் பயண முகவர்கள் மூலம் தாய்லாந்துக்கான சர்வதேச டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், இந்தச் சலுகையைப் பெறலாம். அத்துடன், 20 கிலோலக்கேஜ் அலவன்ஸும் இலவசமாக வழங்கப்படும்.

ஒரு டிக்கெட்டின் அதிகபட்ச வரம்பு ஒரு வழிப் பயணத்திற்கு 1,750 பாட் ($47) அல்லது ரவுண்ட் ட்ரிப் பயணத்திற்கு 3,500 பாட் ($95) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஆறு முக்கிய தாய்லாந்து விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த உள்ளனர். (Thai AirAsia, Bangkok Airways, Nok Air, Thai Airways International, Thai Lion Air மற்றும் Thai VietJet)

Advertisment
Advertisements

free domestic flight tickets 1

இந்தத் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சகம் அடுத்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக 700 மில்லியன் பாட் ($19 மில்லியன்) நிதியைக் கோர உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏன் தாய்லாந்து இதைச் செய்கிறது?

தாய்லாந்து உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் எப்போதுமே முன்னணியில் உள்ளது. பல்வேறு பயணச் சலுகைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில், இது ஒரு தனிப்பட்ட கொண்டாட்ட ஸ்தலமாக இருந்த பிம்பத்தை மாற்றி, ஒரு குடும்பப் பயண இடமாக மாற்ற முயன்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலானோர் க்ராபி (Krabi) அல்லது ஃபூகெட் (Phuket) போன்ற பிரபலமான இடங்களிலேயே முடங்கிவிடுகின்றனர். இந்தச் சூழ்நிலையை மாற்றவும், சுற்றுலா வருமானத்தை நாடு முழுவதும் பரப்பவும் இந்தத் திட்டம் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதங்களில் பிரபல இடங்களில் அதிக மழைப் பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும்.

இந்த முக்கியமான இடங்கள் குறைவாக ஈர்ப்புள்ளதாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குறைவான பிரபலமான இடங்களை ஆராய்வதற்கு இந்தத் திட்டம் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது 200,000 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தாய்லாந்து சுற்றுலா ஆணையம் (TAT) இலக்கு வைத்துள்ளது.

இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய இடங்கள்

தாய்லாந்து ஒரு கடற்கரை நாடு என்பதால், அதிக பருவமழையை எதிர்கொள்கிறது. இது நகரங்களின் அன்றாட செயல்பாடுகளைத் தடுக்கிறது. இந்த நேரத்தில் தாய்லாந்துக்குப் பயணம் செய்ய திட்டமிட்டால், இந்த இடங்களைத் தவிர்ப்பது நல்லது.

மத்திய பகுதி (பேங்காக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்): கனமழை காரணமாக கயாகிங் போன்ற நீர் விளையாட்டுகள் ரத்து செய்யப்படலாம். சந்தைகள் சீக்கிரமாக மூடப்படலாம், தெருக்களில் வெள்ளம் ஏற்படலாம்.

அண்டமான் கடற்கரை (ஃபூகெட், க்ராபி): இந்த இடங்கள் அவற்றின் கடற்கரைகளுக்குப் பிரபலமானவை. ஆனால், மழைக்காலத்தில் கடல் மிகவும் பாதுகாப்பற்றதாக மாறும். அனைத்து நீர் விளையாட்டுகளும், படகு சேவைகளும் ரத்து செய்யப்படும். வெள்ள அபாயமும் உண்டு.

தாய்லாந்து வளைகுடா (கோ சமுய், கோ ஃபங்கான், கோ டாவோ): செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழை குறைவாக இருந்தாலும், நவம்பரில் தென் சீனக் கடலின் அருகாமை காரணமாக பலத்த மழை பொழியும்.

மழைக்காலத்திலும் ஆராய்வதற்கு ஏற்ற இடங்கள்
மழைக்காலம் தாய்லாந்தில் வலுவாக இருந்தாலும், சில பகுதிகளில் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் ஆராய்வதற்கு ஏற்ற சில இடங்கள் இங்கே:

காவ் சாக் தேசியப் பூங்கா (Khao Sok National Park): இது உலகின் மிகப் பழமையான பசுமையான மழைக்காடு. இங்கு மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், ஏரிகள் மற்றும் குகைகள் ஆகியவை இயற்கையின் அற்புதத்தை அனுபவிக்க ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கின்றன. மழைக்காலத்தில் பூங்காவின் அழகு பல மடங்கு அதிகரிக்கும்.

சியங் மாய் (Chiang Mai): இது இயற்கையும் கலையும் கலந்த ஒரு இடம். மழைக்காலத்தில் காடுகளும், நீர்வீழ்ச்சிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இங்குள்ள நூற்றுக்கணக்கான புத்த மடாலயங்கள் கலாசார அனுபவத்தை வழங்குகின்றன.

சியங் ராய் (Chiang Rai): உங்களுக்கு கலாச்சாரத்தின் மீது ஆர்வம் இருந்தால், சியங் ராய் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். இங்குள்ள அற்புதமான வெள்ளை கோவில் (Wat Rong Khun) மற்றும் நீலக் கோவில் (Wat Rong Suea Ten) போன்றவை கலையின் களஞ்சியங்கள்.

free domestic flight tickets 2

மழைக்காலத்தில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய பிற செயல்பாடுகள்
அழகான அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களைப் பார்வையிடலாம்.

தாய் மசாஜ் செய்து கொள்ளலாம்.

சமையல் வகுப்புகளில் தாய்லாந்து உணவுகளை எப்படிச் சமைக்கலாம் என்பதை கற்றுக்கொள்ளலாம்.

வடக்கு தாய்லாந்தின் பசுமையான பாதைகளில் மலையேற்றம் செய்யலாம்.

முயே தாய் (Muay Thai) போட்டி பார்த்து, அதன் பாரம்பரிய கலைத்திறனை அனுபவிக்கலாம்.

SEA LIFE Bangkok Ocean World போன்ற நீர்வாழ் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு கடல் வாழ் உயிரினங்களைப் பற்றி அறியலாம்.

இந்த புதிய திட்டம் தாய்லாந்தின் மறைந்திருக்கும் அழகை ஆராய ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. மழைக்காலம் ஒரு தடையாகத் தோன்றினாலும், அது பல புதிய அனுபவங்களைத் தரும். உங்கள் அடுத்த தாய்லாந்து பயணத்தை இந்தத் திட்டத்துடன் திட்டமிடுங்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: