Thakkali Chutney Recipe Tamil Instant Tasty Tomato Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி என எந்த வகை டிபன் வகைகளுக்கும் சட்னி தக்காளி சட்னிதான். ஆனால், இந்த சட்னி செய்வதில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், மிகவும் வித்தியாசமான சுவையில், மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டும் ரெசிபியை இங்கே காணலாம்.
தேவையான பொருள்கள்
பெரிய தக்காளி - 2 அல்லது 1 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
இஞ்சி நறுக்கியது - ½ இன்ச்
உலர் சிவப்பு மிளகாய் - 2 முதல் 3
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 4 முதல் 5
கிராம்பு - 2 முதல் 3
பெருங்காயத்தூள் (ஹிங்) - 1 சிட்டிகை
தண்ணீர் - அரைப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 7 முதல் 8
கடுகு - ½ தேக்கரண்டி
வெந்தயம் - 2 முதல் 3
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை
எண்ணெயைச் சூடாக்கி அதில் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். குறைந்த தீயில், உளுத்தம் பருப்பை மெரூன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
பருப்பு நிறம் மாறியவுடன், உடைந்த காய்ந்த மிளகாய், கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
குறைந்த தீயில் சுமார் 6 முதல் 7 நிமிடங்கள், தக்காளி மென்மையாகும் வரை கிளறி வதக்கவும்.
தக்காளி கலவை குளிர்ந்ததும், அவற்றை ஒரு சட்னி மிக்ஸரில் அல்லது சிறிய பிளெண்டரில் கொட்டி அதனோடு 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
தாளிப்பு
அதே கடாயில் அல்லது வேறு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும்.
கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
பிறகு கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் மற்றும் உடைத்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
கறிவேப்பிலை மிருதுவாகும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி சட்னியை சேர்க்கவும்.
குறைந்த தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும். சுவையை சரிபார்த்து, தேவைப்பட்டால் மேலும் உப்பு சேர்க்கவும்.
அவ்வளவுதான்... சுவையான தக்காளி சட்னி தயார். இந்த தக்காளி சட்னி இட்லி, தோசை, உத்தபம் அல்லது வடை வகைகளுடன் நல்ல காம்போவாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil