அட்டகாசமான தக்காளி தொக்கு.. தொட்டுக்க 10 இட்லி கொடுத்தா கூட பத்தாது!

சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி தொக்கு செய்து சுவையுங்கள்

chutney onion tomato chutney chutney recipes
chutney onion tomato chutney chutney recipes

Thakkali Chutney Recipe, Thakkali Chutney Recipe in tamil : உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி தொக்கு செய்து சுவையுங்கள்.இந்த தக்காளி தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

தக்காளி – 8 கிராம்
வெங்காயம் – 5 கிலோ
மிளகாய்த் தூள் – 2 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
புளி – கோலி உருண்டையளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

இதில் தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

உடம்பில் தங்கும் விஷப்பொருட்களை தக்காளி அகற்றும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thakkali chutney recipe thakkali chutney recipe in tamil thakkali chutney making video

Next Story
இட்லி- தோசைக்கும் செம்ம சைட் டிஷ்: சுரைக்காய் கூட்டு செய்முறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com