தக்காளி கூட்டு வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ தக்காளி
பச்சை மிளகாய் 4
வெங்காயம் – 1
பாசி பருப்பு 50 கிராம்
2 வெங்காயம்
அரை ஸ்பூன் சாம்பார் பொடி
அரை ஸ்பூன் சோம்பு
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி
எண்ணெய்
செய்முறை : பாசி பருப்பை கழுவி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய், கடுகு, சோம்பு சேர்த்ததும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 நிமிசங்கள் வரை வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்க்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வதக்கவும். தொடர்ந்து இதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், உப்பு, சாம்பார் பொடி, சேர்க்கவும். தொடர்ந்து இதை கிளரவும். தற்போது வேக வைத்த பருப்பை, இதில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.