Thakkali Thokku recipe Tamil : சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்களே ஒருமுறை தக்காளி தொக்கு இந்த முறையில் செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது.
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பெரிய தக்காளி (நறுக்கியது) - 6
சிறிய எலுமிச்சை அளவிலான புளி
வெல்லம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - ½ டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில், சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய தக்காளியை நன்கு வதக்கவும்.
பிறகு புளி, வெல்லம் சேர்த்து கலந்து, இதனை மூடி 10 - 15 நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.
தக்காளி நன்கு குழைந்த பிறகு அதனோடு வறுத்து பொடித்த வெந்தயம் மற்றும் கடுகு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
மசாலா நன்றாக இணைக்கப்பட்டு எண்ணெய் பிரிக்கப்படுவதை உறுதி செய்யும் வரை நன்கு கலந்து விடவும்.
ஒரு சிறிய சூடான கடாயில், எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
தயாரிக்கப்பட்ட தக்காளி தொக்கு மீது தலைப்பை ஊற்றவும்.
இறுதியாக, இந்தக் கலவையை நன்றாக கலந்துவிட்டால் சுவையான தக்காளி தொக்கு / தக்காளி ஊறுகாய் ரெடி.
இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.
மேலும், காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதங்கள் வர பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"