Advertisment

தலைவன் இருக்கின்றான்: கமலுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சில ப்ராஜெக்ட்டுகளை உருவாக்கும் போது மட்டுமே ஃபீல் குட்டாக உணர முடியும். ’தலைவன் இருக்கிறான்’ அந்த வகையைச் சேர்ந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalaivan irukkindraan, kamal haasan, ar rahman

கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்

Thalaivan Irukkindraan: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக கடந்தாண்டு ’விஸ்வரூபம் 2’ திரைப்படம் வெளியானது. இதற்கிடையே முழுநேர அரசியலில் இறங்கிய அவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய அந்நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஃபோட்டோஷூட் முடிந்த பிறகு அதனைப் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார் கமல். தற்போது அந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். நேற்று இது சம்பந்தமாக ரஹ்மானை சந்தித்திருக்கிறார் கமல்.

“கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என இது குறித்து ட்வீட்டியிருந்தார் கமல். அதற்கு, “உங்கள் பங்கேற்புடன் எங்கள் குழுவை வலுப்படுத்துவதற்கு நன்றி. சில ப்ராஜெக்ட்டுகளை உருவாக்கும் போது மட்டுமே ஃபீல் குட்டாக உணர முடியும். ’தலைவன் இருக்கிறான்’ அந்த வகையைச் சேர்ந்தது. இந்தப் படத்தின் மீதான உங்களது உற்சாகத்தை எனது குழுவினருக்குப் பரப்புகிறேன்” என்று பதிலளித்திருக்கிறார் கமல்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை லைகாவுடன் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமலுடன் இணைந்து இந்தி நடிகர் சாயிஃப் அலிகான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர்கானுடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kamal Haasan A R Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment