Advertisment

‘ஜெயா மா’க்கு நேர்த்தியான ஃபேஷன் சென்ஸ் இருந்தது - தலைவி ட்ரெஸ் டிஸைனர் நீதா லுல்லா பேட்டி

பலர் தங்கள் காஞ்சிபுரம் புடவையை கஜ்ராவுடன் அணிந்து செல்லும்போது, ​​அவர் அதை ஒரு கொண்டை சிகை அலங்காரம் செய்து என்வலப் பர்ஸுடன் எடுத்துச் செல்வார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalaivi, neeta lulla, costume designer neeta lulla, costume designer neeta lulla interview, தலைவி, ஜெயலலிதா, நீதா லுல்லா, கங்கனா ரனாவத், jayalalitha fashion, jayalalitha biopic, kangana ranauth, ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா நேர்காணல்

ஆடை வடிமைப்பாளர் நீதா லுல்லா 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். எனவே, ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லாவுக்கு இந்த படம் புதியதல்ல. ஆனால், கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி இவருக்கு எளிதானது இல்லை. இதுவரை பணியாற்றிய படங்களில் இந்த படம் தனக்கு மிகவும் சவாலான படம் என்று கூறும் அதே வேளையில், ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா மறைந்த அரசியல்வாதி ஜெ.ஜெயலலிதாவின் புதிரான ஆளுமையை வாழ்க்கை வரலாற்றில் மீண்டும் கொண்டுவந்துள்ளார். அவை இந்த படத்தின் டிரெய்லரின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, திரை தோற்றத்தை உருவாக்குவதற்குப் பின்னால் சென்ற வேலையைப் புரிந்துகொள்ள ஆடை தொழில்நுட்ப வல்லுநரைக் கண்டுபிடித்தோம். அதற்காக நடந்த ஆய்வுகள், அது ஏன் அவருடைய மிகவும் கடினமான திட்டங்களில் ஒன்றாக இருந்தது ஆகியவை குறித்து பல விஷயங்கள் இங்கே தொகுத்து அளிக்கப்படுகிறது.

தலைவி படத்துக்கு ஆடை வடிவமைப்பு செய்துள்ளீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா?

ஜெயா மாவின் ஆரம்ப ஆண்டுகளைப் பற்றி நான் ஆழமான ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது - அவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, அவரது திரைப்பட உடைகள், அவர் சினிமாவில் ஆடை அணிந்த விதம், அவர் அரசியலில் எப்படி முன்னேறினார், இறுதியாக, ஒரு அரசியல்வாதியாக அவர் பரிணமித்தார் என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. அந்த ஆராய்ச்சி என்பது முக்கியமாக அவரது ஏராளமான படங்களுக்காக ஒரு நூலகத்திற்குச் செல்வது, அவரது திரைப்படங்கள், குறிப்பாக அவரது பாடல்களுக்காக இணையத்திற்கு செல்வது ஆகியவை அடங்கும். ஒவ்வொரு பாடலையும் நான் 15-16 முறை பார்த்திருக்கிறேன்.

இந்த ஆராய்ச்சி செய்யும்போது நீங்கள் என்ன மனதில் வைத்திருந்தீர்கள்?

விரிவான குறிப்புகள், எந்த வகையான உடைகள், குறிப்பாக புடவைகள் அவர் அணிந்திருந்தார். அவர் உடையில் கொடுத்த டச் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி இருந்தது. அந்த காலத்தில், நீங்கள் கூம்பு வடிவ ப்ரா தோற்றத்தைக் கொண்டிருந்ததால், இது உள்ளாடையையும் உள்ளடக்கியது. ஆனால் அரசியல்வாதியாக இருந்த காலத்திலிருந்தே அவரது உடல் அமைப்பு வித்தியாசமாக இருந்ததால், காட்சிகளை படமாக்க வந்தபோது இவை அனைத்தையும் மாற்ற வேண்டியிருந்தது. கங்கனா கூட படத்தின் அந்த பகுதிக்கு 20 கிலோவை கூட்டியிருந்தார். எனவே, எனவே ஆடை சிக்கல் இல்லாததாகவும் நம்பக்கூடியதாகவும் தோற்றமளிக்க ஒரே மாதிரியாக மேட்ச்சாக இருக்க வேண்டியிருந்தது.

எது எப்படி காட்டப்படும் என்பதற்கு இடையில் எது மறைக்கப்படும் என்பது என வந்தபோது நீங்கள் எந்தளவுக்கு சுதந்திரம் எடுத்துக்கொண்டீர்கள்?

உங்களிடம் ஏராளமான படச் சான்றுகள் இல்லாதபோது, ​​கோடுகளை மங்கலாக்குவது எளிது. ஆனால், உங்களிடம் படங்கள் இருக்கும்போது - அவர் சமீபத்தில்தான் காலமானார் என்பதால் - இது ஒரு சவாலான காட்சியாக மாறியது. எனவே, மொத்தத்தில், இது கடினமானதும் அல்ல அல்லது எளிதானதும் அல்ல. ஆனால், விஜய் (இயக்குனர்) ஆடைகளை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டிய இடங்களில் எனக்கு ஒரு சுதந்திரம் அளித்தார். இது யதார்த்தத்திற்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நாங்கள் விவாதிப்போம், அதற்கு பிறகுதான் தொடர்ந்தோம்.

ஆடைகளில் உங்களுடைய தனிப்பட்ட ‘டச்’சை சேர்க்கும்போது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினீர்கள்?

‘ஜெயா மா’வின் சிகை அலங்காரம் மற்றும் ஆபரணங்களுடன் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பேஷன் பற்றிய புரிதலுடன் படங்களின் மூலம் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தது. அசல் தன்மையை அப்படியே வைத்திருக்கும்போது, ​​சினிமா சுதந்திரத்தைப் பயன்படுத்துவதும், ஆக்கபூர்வமான ‘டச்’களை சேர்ப்பதும் (சாத்தியமான இடங்களில்) அவசியம். இதை முடிந்தவரை யதார்த்தமானது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக, ‘சாலி சாலி’ என்ற பாடலில் எங்களால் தனிப்பட்ட டச்சை சேர்க்க முடியவில்லை - பல ஆண்டுகளுக்கு முன்பு அதை போலவே அதைச் படம்பிடிக்க வேண்டும். இப்போது அது பெரும்பாலும் சவாலானது. ஏனென்றால், நாம் அடிக்கடி கருப்பு மற்றும் வெள்ளை வீடியோக்களை குறிப்பிட வேண்டியிருந்தது. அதே போல, ஒரு முறை, நாங்கள் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அலங்காரத்தின் நிறம் நீல நிறமாக இருக்கும் என்று நினைத்தோம்; ஆனால் அதை பெரிய திரை, ஐபாட் மற்றும் கணினித் திரையில் பார்த்த பிறகு, அது அக்வா கலர் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

மற்றபடி, ஒருவர் பெரும்பாலும் அவர்களின் பார்வை மற்றும் உணர்ச்சிகளை வடிவமைப்புகளில் கொண்டு வர முடியும். ஒருவர் அந்த சகாப்தத்தின் களத்தை அப்படியே வைத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, நான் 1960களில் இருந்து ஒரு தோற்றத்தில் பணிபுரிந்தால், என்ன வகையான சுடிதார் அணிந்திருந்தேன், என்ன வகையான வண்ணங்கள் மற்றும் பாணிகள் அப்போது ட்ரெண்டிங்கில் இருந்தன என்பதைப் பார்க்க வேண்டும் - ஏனென்றால் எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனது ஆராய்ச்சி ஒருபோதும் இயல்பாகவே ஒருதலைப்பட்சமாக இருக்கவில்லை. அது எப்போதும் பல பரிமாணங்களுடன் இருந்தது. அந்த சந்தர்ப்பங்களில், நாங்கள் மற்ற இடங்களிலிருந்து உத்வேகம் பெற்றோம். 70 களின் பிற்பகுதியில், எனது குடும்பத்தினரிடமிருந்தும், அந்தக் காலத்தைச் சேர்ந்த வெவ்வேறு நடிகர்களிடமிருந்தும் நான் உத்வேகம் பெற்றேன்.

நீங்கள் ஆடைகளை உருவாக்கிய உங்களுடைய அந்த நாட்களைப் பற்றி எப்படி கூறுவீர்கள்?

நான் 70-90களின் ஆடைகளை வடிவமைத்தேன். இந்த ஆராய்ச்சி அன்றாடம் நடந்தது. ஒருநாள், திடீரென்று ஒரு வீடியோ அல்லது ஒரு படத்தை இணைக்க வேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட பாடலை 15 முறை பார்த்த பிறகும், சில புதிய கூறுகள் தென்படும். அது நம்மை ஏமாற்றும்! அது மிகச்சிறிய விவரமாக இருக்கலாம் - அது ஒருவருடைய ஷூவில் உள்ள எம்பிராய்டரி முதல் நகைகள் வரை இருக்கலாம். எனவே, இது மிகவும் சவாலான படமாக இருந்தது.

இந்த படத்திற்கு உங்களை ஆம் என்று சொல்ல செய்தது என்ன?

மணிகர்னிகாவுக்காக நான் ஆடை வடிவமைத்துள்ளதால் இந்த படத்தை செய்ய கங்கனா என்னிடம் கேட்டார். என் வேலை பாணியையும், வேலை செய்வதில் எனது அர்ப்பணிப்பையும் அவர் விரும்பினார். பின்னர், அவர்கள் என்னை அரவிந்த் சுவாமியின் ஆடைகளில் வேலை செய்யச் சொன்னார்கள்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வெளிப்பட்ட இயல்பு மற்றும் சக்தி, அவள் இருந்த விதம் ஆகியவற்றால் நான் உடனடியாக இந்த படத்துடன் இணைந்ந்துகொண்டேன். - அவர் தனக்கு என்று ஒரு வழியை வகுத்தார். அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்தார். அவர் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு பெண். கங்கனாவிடமும் இதேபோன்ற தொடர்பை நான் உணர்ந்தேன். இதை உங்களுக்கு எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் ஒரு இணைப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் - அது நடக்கும்.

இந்த படத்தில் அவர் என்ன அணிவார் என்று கங்கனாவுக்கு ஒருபோதும் தெரியாது. அவருக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது. நான் அவருடன் ஆழமாக இணைய முடிந்தது. ஏனென்றால், மணிகர்னிகாவின்போதுகூட, அவருடைய ஆடை எப்படி இருக்கும் என்று அவர் என்னிடம் கேட்டதில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அவருக்கு ஆடைகள் இயல்பாக இருந்தது.

எல்லா ஆராய்ச்சிகளுக்கும் பிறகு, ஜெயலலிதா எப்படி ஃபேஷனை எடுத்துக்கொண்டார் என்று விவரிப்பீர்களா?

நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியபோது, ​​அவருக்கு ஒரு நேர்த்தியான பேஷன் உணர்வு இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர் சொந்தமாக ஒரு ஸ்டைல் வைத்திருந்தார். அவர் ஒரு முழுமையான பாடகி, அவர் ஒரு பேஷன் அறிக்கையை உருவாக்கினார். எங்கேயாவது கங்கனாவும்கூட அதைச் செய்கிறார். ஜெயலலிதா தனது காலத்தைவிட முன்னால் இருந்தார். அங்கே பலரால் பின்பற்றப்பட்ட ஒரு ஸ்டைலை உருவாக்க முடியாமல், அதை வசதியாக எடுத்துச் செல்ல அவரிடம் ஒரு ஸ்டைல் இருந்தது.

நான் பேசிக் கொண்டிருந்த அக்வா அலங்காரத்தைப் போல - இது உண்மையில் அதிக பிரிவுகளைக்கொண்ட ஒரு நேரான கவுன். இந்த பாடலில் நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும். அவர் அதை நேர்த்தியுடன் மற்றும் ஸ்டைலாக அணிந்துள்ளார். அவர் தனது ஸ்டைலால் ஒரே மாதிரியான பாணியை உடைத்து, தனக்கென ஒரு ஃபேஷன் மனதை வைத்திருந்தார். உதாரணமாக, பலர் தங்கள் காஞ்சிபுரம் புடவையை கஜ்ராவுடன் அணிந்து செல்லும்போது, ​​அவர் அதை ஒரு கொண்டை சிகை அலங்காரத்துடன் என்வலப் பர்ஸுடன் இருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Jayalalithaa Kangana Ranaut Thalaivi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment