காஸ்ட்லியான காஞ்சிபுரம் பட்டு.. அப்புறம் அந்த மரகதக் கல் நெக்லஸ்... 'தலைவி' கங்கனாவின் கெத்தான காஸ்ட்யூம்ஸ்!

Thalaivii Kangana Ranaut wears Costly jewellery with a story behind Tamil News இந்த உடையுடன் கெம்ப் கற்கள் பொறிக்கப்பட்ட சோக்கர் அணிந்திருந்தார்.

Thalaivii Kangana Ranaut wears Costly jewellery with a story behind Tamil News இந்த உடையுடன் கெம்ப் கற்கள் பொறிக்கப்பட்ட சோக்கர் அணிந்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Thalaivii Kangana Ranaut wears jewellery customised for fourth National Award ceremony Tamil News

Thalaivii Kangana Ranaut wears jewellery customised for fourth National Award ceremony Tamil News

Thalaivii Kangana Ranaut wears Costly jewellery with a story behind Tamil News : மறைந்த நடிகையும் அரசியல்வாதியுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அதில் பாலிவுட் குயின் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். தலைவி திரைப்பட ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பகிர்ந்துகொண்டார். அவை தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisment

முதல் புகைப்படத்தில் வெள்ளை நிற காஸ்ட்லீயான காஞ்சீபுரம் புடவையில் மிடுக்காக இருக்கிறார். புடவைக்கு ஏற்ற மேட்சிங் பிளவுஸ் அணிந்து பழம்பெரும் அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

Advertisment
Advertisements

இந்த முழு தோற்றத்தில் அவர் அணிந்திருந்த நகைகள்தான் ஹயிலைட். மரகத கற்கள் பதித்த நெக் பீஸ் பிரமிக்க வைக்கிறது. இந்த நெக்லஸ் பின்னால் ஒரு சிறிய கதையும் இருக்கிறது. இந்த அழகிய படத்தைப் பகிர்ந்த கங்கனா, "இந்த நெசவு செய்யப்பட்ட புடவை மற்றும் மரகத கற்கள் பதித்த நகை என்னுடைய நான்காவது தேசிய விருது விழாவிற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. ஆனால், கோவிட் காரணமாக அது தாமதமானது. இந்த அழகை அணிய என்னால் இனி காத்திருக்க முடியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன்?" என்று கேள்வி எழுப்பியபடி கேப்ஷனையும் இணைத்திருந்தார்.

இரண்டாவது புகைப்படத்தில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல தயாரானவர், ஒரு அழகிய மாம்பழ நிறப் புடவையை தேர்ந்தெடுத்தார். இந்தப் பிரகாசமான புடவை விளிம்பில் சிவப்பு மற்றும் தங்க பார்டர் மேலும் அழகி மெருகேற்றியது. இந்த எளிமையான மற்றும் அழகிய புடவையைப் பொருத்தமான பிளவுஸுடன் இணைத்து ஸ்டைலிஷ் தோற்றதைப் பெற்றார். மேலும், இந்த உடையுடன் கெம்ப் கற்கள் பொறிக்கப்பட்ட சோக்கர் அணிந்திருந்தார். இந்த இரண்டு புகைப்படங்களும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalaivi Kangana Ranaut

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: