/indian-express-tamil/media/media_files/2025/05/01/W1H92gCl0u21s3Kikr0C.jpg)
மயக்கும் வாசம் வீசும் தாழம்பூவின் மருத்துவ குணங்கள்!
பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ. செந்தாழம்பூ என்றால் சிகப்பு கலரில் இருப்பதாக நினைக்க வேண்டாம். வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது. நீரோடைகளிலும், ஆறுகளிலும், கேட்பாரற்று புதராக வளர்ந்து நறுமணம் பரப்புவதுடன், பெண்களின் மலட்டுத் தன்மை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது தாழம்பூ.!
தாழம்பூவில் ஏராளனமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கிறது. முக்கியமாக உடல் உஷ்னத்தை குறைக்கக்கூடியது. உடல்சூட்டினால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தாழம்பூ எசன்ஸ் மிக பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு உடல் எப்போதும் அதிக சூட்டுடன் இருக்கும். இதனால் அடிக்கடி எண்ணெய் குளியல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்களுக்கு உடல் சூடு குறையாது. அப்படி இருப்பவர்கள் அதிக உடல் சூட்டினை குறைப்பதற்கு இந்த தாழம்பூ எசன்ஸை பயன்படுத்தலாம். கோடை காலத்தில் உடல்குளிர்ச்சிக்கு சாப்பிடுவதற்கு ஏற்றது தாழம்பூ எசன்ஸ்.
உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் 1 டம்ளர் அளவு தண்ணீரில் தாழம்பூ எசன்ஸை 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து குடிக்கலாம். தண்ணீர் மட்டுமல்லாமல் ஜுஸில் கலந்தும் குடிக்கலாம். உடல் சூடானால் வெப்ப நோய்கலின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
தாழையில் சிவப்பு, வெள்ளை என இரு வகை உண்டு. தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்குறையில் உள்ளபோது மின்னலுடன் மழை பெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. மற்ற நாட்களைக் காட்டிலும் மின்னலுடன் மழை பெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் மலர்ந்திருக்கும். மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்குவிப்பானாக செயல்படுகிறது. இயற்கை வழியில் தாழம்பூ சென்ட் எடுக்கலாம். தாழம்பூவின் மணம் மனிதர்களை மட்டுமல்ல, கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன்வசம் ஈர்க்கும் சக்தி கொண்டது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.