தாலிக் கயிறு மாற்ற நாள்- கிழமை பார்க்க வேண்டுமா? நடைமுறை என்ன?
திருமணம் ஆன பெண்கள் பொதுவாக தாலி கயிற்றை வருடத்திற்கு 2 முறை மாற்றுவது வழக்கம். எனினும் சந்தர்ப்பம், தேவைக்காக இடைப்பட்ட நாளில் தாலி சரடை சிலருக்கு மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு செய்வது சரியா, எந்த நாளில் மாற்றுவது நல்லது உள்ளிட்டவை குறித்து அனிதா குப்புசாமி விளக்குகிறார்.
பிரபல நாட்டுப் புறப் பாடகியான அனிதா குப்புசாமி ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவர். தனது யூடியூப் பக்கத்தில் அழகு குறிப்புகள், ஆன்மீகம் சார்ந்த தகவல்கள், மாடித் தோட்டம் அமைப்பது, பராமரிப்பது உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் திருமணம் ஆன பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றும் போது செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூறியுள்ளார்.
Advertisment
திருமணம் ஆன பெண்கள் மஞ்சள் பூசிய கயிற்றை தாலி கயிறு அல்லது சரடாக கழுத்தில் அணிவர். இந்த கயிற்றை வருடத்திற்கு 2 முறை முக்கியமாக ஆடிப் பெருக்கு நாளில் தாலி கயிற்றை மாற்றுவர். எனினும் சந்தர்ப்பம், தேவைக்காக இடைப்பட்ட நாளில் தாலி சரடை சிலருக்கு மாற்ற வேண்டி இருக்கும். அப்படி செய்யும் போது குறிப்பிட்ட நாள்-கிழமைகளில் மாற்ற வேண்டும் என அனிதா குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் கூறுகையில், "மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தாலிக் கயிறுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிலர் தங்கத்திலும், சிலர் மஞ்சள் கயிறாகவும் அணிந்துள்ளனர்.
உண்மையில் தாலி கயிறு மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று எல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும். தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றுவது நல்ல நாளாக இருக்கும்.
உங்களுடைய தாலிக்கயிறு அல்லது தாலி சரடை மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். அதுபோல் தாலிக்கயிறு மாற்றும் பொழுது உங்கள் கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி வயதானவர்கள் யாராவது உங்களுடன் இருக்க வேண்டும். அதுபோல ஒருமுறை தாலிக்கயிறு மாற்ற உட்காரும் பொழுது முடியும்வரை எழுந்திருக்க கூடாது. தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள்.
திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ இவைகளையெல்லாம் ஒரு தட்டில் எடுத்து உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் கர்ப்பிணிகள் மாற்ற கூடாது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும். மற்றபடி யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். தாலி கயிறு மாற்றும் நடைமுறை எளிது. காலையில் பிரம்ம மூகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு திருமாங்கல்யத்தை மாற்ற வேண்டும்.
அதன் பிறகு மஞ்சள் குங்குமம், பூ அனைத்தும் வைத்துவிட்டு தாலிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு நேராக உங்கள் பூஜை அறைக்கு சென்று சாமியை வணங்கிவிட்டு அதன்பிறகு உங்கள் காலை உணவை சாப்பிடலாம். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாற்றினால் இன்னும் சிறப்பு.
நீங்கள் அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். வெளியில் குப்பையில் தூக்கி போட வேண்டாம்" என்று அவர் கூறினார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news