திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி

தியாகராஜர் ஆராதனை விழா; திருவையாறில் குவிந்த பாடகர்கள்; பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி; ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த முன்னணி பாடகர்கள் முடிவு

தியாகராஜர் ஆராதனை விழா; திருவையாறில் குவிந்த பாடகர்கள்; பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி; ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த முன்னணி பாடகர்கள் முடிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thiruvaiyaru thiyagaraja

தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவின் நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

Advertisment

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தியாகப் பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். அங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விழாவைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இசைக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, தியாகராஜர் சிலைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, தியாகராஜர் வாழ்ந்த அவரது இல்லத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட உஞ்ச விருத்தி, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.

காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisment
Advertisements

தொடர்ந்து, சுசித்ரா குழுவினரின் ஹரி கதை, தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு தியாகராஜ சுவாமிகள் வீதியுலாவும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி ஆகியோர் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் தியாகராஜ சுவாமிகள் இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தி வருகிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்துகிறது. இசைப்பிரியர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்” என்றனர்.

க.சண்முகவடிவேல்

Thanjavur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: