சேலம் தட்டு வடை செட் ரெசிபியை மிகவும் ஈசியா வீட்டில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் தோல் நீக்கிய உளுந்து
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
1 கப் அரிசி மாவு
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
பெருங்காயத்தூள்
1 கொத்து கருவேப்பிலை
உப்பு
தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
பூண்டு எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்
10பூண்டு , 1 சிட்டிகை உப்பு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
பச்சை சட்னி – 1 ஸ்பூன்
காரச் சட்னி – 1 ஸ்பூன்
2 ஸ்பூன் துருவிய பீட்ருட்
2 ஸ்பூன் துருவிய மாங்காய்
2 ஸ்பூன் வெங்காயம்
2 ஸ்பூன் துருவிய கேரட்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை: முதலில் நாம் தட்டையை செய்து கொள்ள வேண்டும். உளுந்தை வறுத்துகொள்ளவும். கடலை பருப்பை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மிக்ஸியில் உளுந்து, பொட்டுக்கடலை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த மாவு, கடலை பருப்பு, பெருங்காயம், சீரகம், கருவேப்பிலை நறுக்கியது, உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேத்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து தட்டையை ரெடி செய்து பொறித்து எடுக்கவும்.
இதுபோல பூண்டை நறுக்கி, எண்ணெய் போட்டு, உப்பு சேத்து ரெடி செய்யவும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், மாங்காய், வெங்காயம், எலுமிச்சை சாறை சேர்க்கவும். இதை கிளர வேண்டும். தொடர்ந்து ஒரு தட்டையை எடுத்து அதில் காரச் சட்னி தடவ வேண்டும். தொடர்ந்து அதற்கு மேலாக காய்கறி கலவை, அதற்கு மேலாக பூண்டு எண்ணெய், இனியொரு தட்டையில் பச்சை சட்னி தடவி மூடவும். தட்டு வடை செட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“