Coimbatore | கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124ஆவது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி விழா ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காந்தி கிராம நிகர் நலை பல்கலை கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் பழனித்துரை, “இன்றைய சமூகம் எதையோ தேடி வேகமாக ஓடிக்கொண்டே, ஒரு வித மயக்கத்துடன் வாழ்வதாக குறிப்பிட்ட அவர் இந்த மயக்கத்தில் இருந்து விடுபட தியானம்,யோகா போன்ற மனிதனை அறிந்து கொள்வது ஒன்றே வழி என்றார்.
மேலும், “மகரிஷி பரஞ்சோதியார் தமது அருளுரையில் தனி மனித அமைதிதான் உலக அமைதிக்கு அடிப்படை. எங்கு அமைதி நிலவுகிறதோ,m அங்கு கடவுள் உள்ளார். எங்கு கடவுள் உள்ளாரோ,அங்கே தான் அமைதி நிலவும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஓர் இறை ஓர் இனம் என ஒன்று பட்ட ஞானமும் அரசியலும் ஒன்றுபட்டால் அன்றே உலக சமாதானம் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சமாதான அறக்கட்டளையின் பொது செயலாளர் சுந்தர் ராமன் மற்றும் அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் ஆகியோர், “போதை பொருட்களில். இருந்து விடுபட இளம் தலைமுறையினரிடம் தியானம்,யோகா விழிப்புணர்வு தேவை.
இளைய சமுதாயத்தினருக்கு ஞானிகளின் வாழ்வியலை மையமாக கொண்ட புரிதல்களை கொண்டு சேர்ப்பது தற்போது அவசியம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“