மிகவும் பொதுவான பாலியல் செயலிழப்பு என்பது சுய உருவம் பற்றிய தாழ்வு மனப்பான்மையே. இது 11 சதவிகித பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறது.
9 சதவிகித பெண்களைத் தூண்டுதலில் உள்ள சிரமங்கள் உறவைப் பாதித்தன. 8 சதவிகிதத்தினருக்கு ஆசை ஏற்படுவது ஒரு பிரச்னையாக இருந்தது. உச்சக்கட்டத்தை அடைய இயலாமை 7.9 சதவிகித பெண்களைப் பாதித்தது.
10 பெண்களில் 3 பேர் பாலியல் தொடர்பான தனிப்பட்ட துயரங்களைக் கொண்டிருந்தனர். பொதுவாகப் பெண்கள் அதிக எடை அல்லது உடல் பருமனோடு இருந்தால், பாலியல் வாழ்வுக்கு தாங்கள் தகுதியில்லாதவர்கள், தங்களால் இணையைத் திருப்திப்படுத்த முடியாது என்று நினைத்து, தேவையற்ற கவலைகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
இதுவே ஒரு கட்டத்தில் பாலியல் செயலிழப்புக்குத் தள்ளிவிடும். ஆனால், இந்த எண்ணத்தில் எந்த உண்மையும் இல்லை. உடலின் வடிவத்துக்கும் உடலுறவின் திருப்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே மருத்துவ அறிவியல் கூறும் உண்மை.
இந்தப் பிரச்னை உலகில் 12 சதவிகித பெண்களைப் பாதிக்கிறது என்பதால், அதிக கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
தாங்கள் பருமனாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளத் தயங்குவது வழக்கம்.
மகப்பேற்றுக்குப் பின் இவர்கள் குழந்தைக்குப் பாலூட்டவும் தயங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கெல்லாம் சுய உருவம் குறித்த மோசமான எண்ணமே காரணம்.
தேவையற்ற இந்த எண்ணத்தைப் போக்கிக்கொள்வதே இதிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியான பாலியல் வாழ்வில் இன்பம் அடைவதற்கான முதல் வழி.
இதுவே பெண்கள் நேர்மறையான பாலியல் வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான அடிப்படை ஆகும். ஆகவே தேவையற்ற கவலைகளை தூக்கி எறியுங்கள்.
தகவல் உதவி:
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
வாட்ஸ் அப் தொடர்பு எண் 9344186480
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil