கார் நிறைய நேரம் வெயிலில் நிறுத்தும்போது காரின் அனைத்து பகுதிகளிலும் ஆர்கனோ பாஸ்பேட் எஸ்டர் என்ற கெமிக்கல் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த கெமிக்கல் நமக்கு புற்றுநோயை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் வெயில் காலத்தில் நிறுத்திய காரில் ஏறிய உடனேயே ஏசியை ஆன் செய்யக்கூடாது. ஏனெனில் கார் டேஷ்போர்டுகள், இருக்கைகள் மற்றும் ஏர் ஃப்ரெஷ்னர்களில் இருந்து வெளியாகும் அந்த நச்சு அபாயகரமான புற்றுநோயை உண்டாக்கும் என்று மருத்துவர் நிஷா கூறுகிறார்.இதுகுறித்து அவர் க்ளேர் வேதா ஆயூர் க்ளீனிக் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
வெயில் காலங்களில் வாகனங்களில் ஏசியை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும். கார் டேஷ்போர்டுகள், இருக்கைகள் மற்றும் ஏர் ஃப்ரெஷ்னர்களில் இருந்து வெளியாகும் பென்சைம் என்ற விஷ வாயு, மிகவும் ஆபத்தான் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்றனர்.
வெயிலில் நிறுத்தப்பட்ட காரில் நுழைந்த உடனேயே ஏசியை ஆன் செய்தால், நச்சு வாயுவை அதிக அளவில் சுவாசிக்க கூடும் இதனால் புற்றுநோய் உருவாகும்.
The hidden Cancer Risk you’re Ignoring, But Everyone's Doing It | Dr. Nisha
நீண்ட நேரம் வெயிலில் காரை நிறுத்தியிருந்தால் அனைத்து ஜன்னல்களையும் கீழே இறக்கி, சூடான காற்று வெளியேற அனுமதிக்க வேண்டும்.ஒரு 10 நிமிடம் இதுமாதிரி செய்த பிறகு கண்ணாடியை மூடிவிட்டு ஏசியை ஆன் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.