உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, வானிலை ஆராய்ச்சி தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டின் ஜூலை மாதம்தான் மிகவும் வெப்பமான மாதம் என்று அறிவித்துள்ளது.
ஐரோப்பிய மத்திய பகுதியின் வானிலை முன்னறிவிப்பு மையம் கோபர்நிக்கஸ் காலநிலை மாற்றம் திட்டத்தை நடத்துகிறது. இதன் மூலம், தரவுகளை ஆய்வு செய்து சில கண்டுபிடிப்புகளை உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் மிக வெப்பமான மாதமாக இருந்தது. 2019 ஜூலை மாதத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலை அதற்கு இணையாக இருந்தது. 4 மிக வெப்பமான மாதங்கள் பற்றி கேட்கப்படும்போது, 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
கோபர்நிக்கஸ் திட்டத்தின் ஒரு அறிக்கையில், இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக வெப்பமான ஜூன் மாதங்களில், கடந்த ஜூன் மாதம்தான் மிக வெப்பமான ஜூன் மாதம் என்று தெரிவித்துள்ளது. ஜூலை 2019-இல், தொழில்மயமாவதற்கு முந்தைய வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. பாரிஸ் ஒப்பந்தம் தொழில்மயமாவதற்கு முந்தைய உலக சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைத்திருக்க வேண்டும் என்று இலக்காக நிர்ணயித்திருந்தது. மேலும், அது, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுப்படுத்த வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கவலை
சமீப வாரங்களாக உலகம் முழுவதும் வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை காணப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகள் வெப்பநிலை உயர்வை பதிவு செய்துள்ளன. “இந்த அசாதாரண வெப்பம் காரணமாக கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் ஐரோப்பிய பனிப்பாறைகளின் உருகுநிலை வியத்தகு அளவில் இருந்தன. ஆர்டிக்கில் தொடர்சியாக இரண்டு மாதமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அவற்றை கிரீன் ஹவுஸ் வாயுக்களாக வெளியேற்றும் பழமையான காடுகள் அழிவுக்குள்ளானது. இது அறிவியல் புனைகதை அல்ல. இது காலநிலை மாற்றத்தின் யதார்த்தம். இப்போது நடந்துகொண்டிருக்கிற இந்த காலநிலை மாற்றம் குறித்து அவசரமான காலநிலை நடவடிக்கை எடுக்காவிட்டால், அது எதிர்காலத்தை மோசமடையச் செய்யும்” என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை ஐ.நா.பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கூறிய, “இந்த ஆண்டு மட்டும், புது டெல்லியில் இருந்து அலாஸ்காவின் ஆன்கரேஜ்வரை, பாரீஸ் முதல் சாண்டியாகோ வரை, அடிலெய்ட் முதல் ஆர்டிக் வட்டம் வரை வெப்பநிலை மாற்றம் சிதைந்துள்ளதைப் பார்க்கிறோம். நாம் காலநிலை மாற்றம் குறித்து இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த தீவிர வானிலை நிகழ்வுகள் பேராபத்தின் தொடக்கமாக இருக்கும். தற்போது, உண்மையில் பனிப்பாறைகள் விரைவாக உருகிக்கொண்டிருக்கிறது” கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது.