/indian-express-tamil/media/media_files/2025/08/20/back-pain-2025-08-20-19-08-12.jpg)
முதுகு வலியைக் குறைக்கும் மேஜிக் பவுடர்… கிச்சன்லேயே இருக்கு; டாக்டர் கார்த்திகேயன்
உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும், குறிப்பாக முதுகு மற்றும் மூட்டு வலிகளுக்கும், சமையலறையில் இருக்கும் பொருள் தீர்வாக அமையக் கூடும் என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோவில் விளக்குகிறார். 'பேக்கிங் சோடா' (Baking Soda) எனப்படும் சமையல் சோடா சரியான முறையில் பயன்படுத்தினால், உடல் வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறிய டாக்டர் கார்த்திகேயன், அதற்கான அறிவியல் பூர்வ விளக்கங்களையும் அளிக்கிறார்.
பேக்கிங் சோடா என்பது சோடியம் பைகார்பனேட் (Sodium Bicarbonate - NaHCO3) ஆகும். இதன் pH அளவு 7-க்கு அதிகமாக, காரத்தன்மையுடன் (Alkaline) இருக்கும். உடலில் அழற்சி (Inflammation) ஏற்படும்போது, உடலின் pH அளவு குறைந்து அமிலத்தன்மை (Acidity) அதிகரிக்கிறது. பேக்கிங் சோடாவை உட்கொள்ளும்போது, அது உடலின் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி, காரத்தன்மையை மீட்டெடுக்க உதவுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஆன்டாசிட் மருந்துகள் இதே தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. உடலின் பெரும்பாலான வலிகளுக்கும், பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கும் கூட இந்த அழற்சியே முக்கிய காரணம். பேக்கிங் சோடா இந்த அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
பேக்கிங் சோடாவை எப்படிப் பயன்படுத்தலாம்?
டாக்டர் கார்த்திகேயன் ஒரு எளிய முறையைப் பரிந்துரைக்கிறார். ¼ தேக்கரண்டி (சுமார் 1-1.5 கிராம்) பேக்கிங் சோடாவை 250 மிலி அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் கலக்கவும். இந்தக் கலவையை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதை தினமும் குடிக்க வேண்டாம். 20 நாட்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 10 நாட்கள் குடிக்கலாம். இந்த 20 நாட்கள் சுழற்சி முடிந்த பிறகு, ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் இடைவெளி விட வேண்டும். வயிற்று உபாதைகள், வாந்தி அல்லது ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக இதனை நிறுத்திவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பேக்கிங் சோடா மாய மருந்து அல்ல என்று மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்துகிறார். இது ஒரு துணை சிகிச்சை மட்டுமே. அழற்சியைக் குறைக்க உதவும் பிற இயற்கையான உணவுப் பொருட்களையும் அவர் பரிந்துரைக்கிறார். மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) அழற்சியைக் குறைக்கும். மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உதவுகின்றன. திராட்சை போன்ற அடர் நிற பழங்களில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் சிறந்தது. மூளை ஆரோக்கியத்திற்கு வால்நட் (Walnuts) உதவும்.
மேலும், அதிக உப்பு, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து (refined carbohydrates), வறுத்த மற்றும் பேக்கரி உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார். அன்றாடம் 20 நிமிடங்கள் நடைபயிற்சி, 7-8 மணி நேர தூக்கம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அழற்சியைக் குறைக்க உதவும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.