முட்டையில் உள்ள நன்மைகள் குறித்தும் அதை சாப்பிட வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வீடியோ வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை முட்டை தொடர்பாக வீடியோவில் பேசியதாவது: ” என் கையில் வைத்திருப்பது முட்டை. இதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் அதிக அளவில் புரதம் இருக்கிறது. ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருக்கிறது. செலினியம் இருக்கிறது. அது உடல் வளர்ச்சிக்கு நல்லது. கொலின் இருக்கிறது. இது நரம்பு மண்டலத்தின் வளர்சிக்கு உதவும். கர்ப்பிணிகளுக்கு முட்டையை கொடுக்கும்போது, கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதில் லூட்டின் மற்றும் வைட்டமின் எ உள்ளது. இவை இரண்டும் கண் பார்வைக்கு நல்லது. கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும். வைட்டமின் எ, டி, டி6, பி12, பாஸ்பரஸ்,ஐயோடின் இருக்கிறது. உடலுக்கு தேவையான அத்தனை பொருட்களும் ஏதேனும் ஒரு அளவில் முட்டையில் இருக்கிறது. இதில் 150 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. கொழுப்பு சத்து வேண்டாம் என்று நினைப்பவர்கள் மஞ்சள் கருவை மட்டும் தவிர்க்கலாம். நாம் அனைவரும் முட்டையை சாப்பிட்டு பழகுவோம் “ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“