எந்த நேரம் எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள்

தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு. ஆனால் இதில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ள தான் மனமும் உடலும் தயங்குகிறது. ஆமாம் காலை உணவை மட்டுமில்லை ஒரு வேளை உணவிஅ தவிர்த்தால் கூட உங்களால் உடல் எடையை குறைக்க முடியாது.

`மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்பதை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறோம். ஆனால், `ஒரு நாளைக்கு ஐந்து வேளையாக உணவைப் பிரித்துச் சாப்பிடுவதே சிறந்தது’ என்கிறார்கள் உணவியலாளர்கள். நாம் உண்ணும் சில உணவுகளை சாப்பிடுவதற்கு என்று நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உடல் எடை கூடுவதையும் தடுக்கலாம்.

ஏனென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இதை முற்றிலும் தடுக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது இது தான்.

1. காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது.காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும்.

2. மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், மதிய உணவுதான் ஒரு நாளில் நாம் சாப்பிடும் அதிக அளவு உணவு. உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

3. இரவு உணவை மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

4.குறிப்பாக இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.

×Close
×Close