சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடல் தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு

எனவே சீனாவின் அரசியல் தலையீடு, ராணுவ நடவடிக்கை, முதலீடுகள் ஆகியவை சாம்பல் மண்டலத்தின் வடிவங்களாகவே உள்ளன.

இந்த காட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் : Jabin T Jacob

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் மற்ற வல்லரசு நாடுகளைப்போல், சீனாவும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது. அதை சாதிப்பதற்காக, அதன் நடவடிக்கைகளுக்கு இந்தியப்பெருங்கடல் பகுதிகள் இன்றியமையாததாக உள்ளன.

Title: The Costliest Pearl: China’s Struggle for India’s Ocean
Author: Bertil Lintner
Publication: Context
Pages: 325
Price: 699

பெர்டில் லின்ட்னர் என்பவர் விலை உயர்ந்த முத்துக்கள் என்ற புத்தகத்தில், உலகில் அதிகளவில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் சிக்கலான பகுதிகள் குறித்து விளக்கியுள்ளார். அதில் இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய தீவுகள் குறித்தும் எழுதியுள்ளார். அத்தீவுகளில் சிறிது, சிறிதாக, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து விளக்குகையில், அத்தீவுகள் பற்றி எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய, வாசிக்க ஏதுவான மொழியில், அதன் வரலாறு, உள்நாட்டு அரசியல், அதன் வெளியுறவு கொள்கைகள் ஆகியவை குறித்து கூறியுள்ளார். இந்த செல்வாக்கு உயர்ந்து வருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து லின்ட்னருக்கு, தெளிவான பார்வை இல்லை. அதனால், புத்தகத்தில் அதற்கான ஆதாரங்கள் குறைவாக உள்ளன. ஒரு பத்திரிக்கையாளராக ஆசியா குறித்து தசாப்தங்களை கடந்து எழுதிவரும் அவரின் எழுத்துக்கள் நல்ல அடித்தளமாக அமைகிறது. கிழக்காசிய நாடுகளில் சீனா ஒரு இடத்தை தக்கவைத்திருக்கிறது. 1978ம் ஆண்டு நடந்த பொருளாதார சீரமைக்குப்பின் அவர்கள் தனித்துவமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள். மன்னர்கள் மற்றும் மாவோ காலத்திற்கு பின் சீனாவின் அரசியல் மற்றும் வெளியுறவுக்கொள்ளைகள் மாறிவிட்டதாக காட்டிக்கொள்கின்றனர்.

சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் மற்ற வல்லரசு நாடுகளைப்போல், சீனாவும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது. அதை சாதிப்பதற்காக, அதன் நடவடிக்கைகளுக்கு இந்தியப்பெருங்கடல் பகுதிகள் இன்றியமையாததாக உள்ளன. மேலும் அந்த புத்தகத்தில், ஜீபூத்தி, மொரீசியஸ், ஷேஷல்ஸ், மாலத்தீவுகள், மியான்மர் மற்றும் இந்தியாவில் உள்ள தீவுப்பிரதேசங்கள், பிரான்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ளவை குறித்தும் விளக்கியுள்ளார். குறிப்பாக பிரான்சுக்கு கொடுத்துள்ள கவனம் குறிப்பிடத்தக்கது. மிக அண்மை வரையில், இந்தியப்பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு இந்தியாவைப்போல் குறைந்த கவனமே இந்த புத்தகமும் கொடுத்துள்ளது.

இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனா நுழைந்தபோது, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியது. சிறிய அளவானதாக இருந்தாலும் கூட அங்கிருந்த சீன இன மக்கள் உள்ளிட்ட, அனைத்து மக்களுக்கும் ஆதரவளித்தது. மடகாஸ்கரில் வளர்ந்துவரும், இரண்டு குழுவினருக்கிடையேயான கருத்துவேறுபாடு குறித்து கவனிப்பது சுவராஸ்யமாக உள்ளது. அது என்னவென்றால், சீனாவில் இருந்து இடம்பெயர்ந்து தலைமுறைகளை கடந்து மடகாஸ்கரில் வசிக்கும் சீனாவின் மூத்த குடிமக்கள் மடகாசி என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் புதிதாக சீனாவில் இருந்து மடகாஸ்கருக்கு இடம்பெயர்பவர்கள் பணத்தின் மீது ஆர்வம் செலுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் சீனாவின் நற்பெயரை களங்கப்படுத்துவதாவும் கூறுகின்றனர். இதை உணர்வுமயமான விஷயமாக லின்ட்னர் பார்க்கிறார். இது எதை அறிவுறுத்துகிறது என்றால், சீனாவால், இந்திய பெருகடலில் உள்ள தேசங்களின் அரசியலில் நுழைவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை காட்டுகிறது. என்னதான் இந்தியாவுக்கும், இந்தியப்பெருங்கடல் நாடுகளுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருந்தாலும் அவர்களின் அரசியலில் நுழைவது டெல்லிக்கும் எளிதான ஒன்று கிடையாது.

இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் மறறும் வெறியுறவுக்கொள்கைகள் குறித்த அறிவு இருந்தாலும், அவர்களுக்கு பொருளாதாரம், ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவக்கூடிய தகுதியிருந்தாலும், மனித வளம் மற்றும் பொருளாதாரத்தை வழங்குவதில் சீனாவே, இந்தியாவைவிட முதன்மையாக உள்ளது. அது இந்தியாவின் பூகோள ரீதியிலான நன்மை உள்ளிட்ட அனைத்தையும் குறைத்துவிடுகிறது. சொந்தப்படையின் திறன் மீதே சந்தேகம் கொண்டதாக ஒரு நிலை இல்லாததாக இந்தியப்படை உள்ளது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் எழுச்சி மற்றும் அதை எதிர்கொள்ள போதிய வசதியில்லாத இந்திய ராணுவத்தின் நிலை அங்குள்ள படைக்கு தெரியும். இந்தியாவின் அரசியல் கொள்கைகளை வகுப்பவர்களுக்கு இந்த புத்தகம் உண்மையை எவ்வித மிகைப்படுத்துதலும் இல்லாமல் விளகிக்காட்டுகிறது.

பெய்ஜிங் அதன் ராணுவத்தை இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் நிறுத்திவைப்பதில் ஆர்வம்காட்டி வருகிறது. இந்தியப்பெருங்கடலில் உள்ள கோமரோஸ், ஷேஷல்ஸ், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சீனா, நீண்ட காலமாக ஆயுதம் வழங்கி, ராணுவப்பயிற்சி அளித்து வருவது, ஜிபூத்தியில் உள்ள ராணுவ தளத்தின் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. புத்தகத்தில் மேலும் உள்ள சுவாரஸ்யம் என்னவெனில், மடகாகஸ்கர் மற்றும் ஷேஷல்ஸில் வடகொரியர்கள் தலைமைபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரலாற்று மற்றும் அரசியல் நேர்மையில்லாத தன்மை குறித்து சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த, சினிமாக்களுக்கு பயன்படும் சில யோசனைகளையும் லின்ட்னர் விவரித்துள்ளார்.

எழுத்தாளரின் பார்வை குறித்து ஒருவர், இந்தியப்பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் உலக நாடுகளிடையே போரை உருவாக்கலாம் என்று கேட்கலாம், ஆனால், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உட்டோப்பிய அதிகார பகிர்வு ஒப்பந்தம் போரை தடுத்து, பனிப்போராக மாற்றி, தீவிரவாதத்தை சமநிலைப்படுத்துகிறது என்கிறார். சீனாவின் சமீபத்திய எழுச்சி சாம்பல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. எதிரிகள் பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும், சீனா பலம் வாய்ந்தாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதில் சீனா பல்வேறு காரணங்களால், மாபெரும் வெற்றியை எட்டாமலே இருக்கிறது. சீனாவின் எதிரிகள் அதன் தெற்கு கடற்கரை பகுதிகளை தங்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கின்றன. இதனால் சூழ்நிலைகள் சீனாவிற்கு எதிராக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே சீனாவின் அரசியல் தலையீடு, ராணுவ நடவடிக்கை, முதலீடுகள் ஆகியவை சாம்பல் மண்டலத்தின் வடிவங்களாகவே உள்ளன.

பேராசிரியர் ஜேபின் ஜேக்கப், ஷிப்நாடார் பல்கலைக்கழகம்

தமிழில் R.பிரியதர்சினி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close