scorecardresearch

இத்தனை கோடிக்கு சொகுசு கார்களா? தி ராக் கார் கலெக்ஷன்ஸ்

முன்னாள் மல்யுத்த வீரர் தி ராக் (டுவைன் ஜான்சன்) கார்களின் கலெக்ஷன்ஸ் குறித்து பார்க்கலாம்.

The Rocks car collection
தி ராக் ரூ.60 கோடிக்கும் அதிகமான கார்களை வைத்துள்ளார்.

WWE வீரர், அமெரிக்க பணக்கார நடிகர் என பல முகங்களை கொண்டவர் தி ராக். டுவைன் ஜான்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மல்யுத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஆவார்.
இவர் நடிப்பில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ், ஜூமான்ஜி, பே வாட்ச் உள்ளிட்ட படங்கள் சக்கைப் போட்டு போட்டன. இவர் ஒரு கார் விரும்பி ஆவார்.

பகானி ஹுய்ரா

இவரிடம் கிட்டத்தட்ட ரூ.60கோடிக்கு மேல் கார்கள் உள்ளன. அதிலும் இவர் வைத்திருக்கும் பகானி ஹுய்ரா (Pagani Huayra) காரின் விலை ரூ.21.4 கோடி ஆகும்.
இத்தாலி தயாரிப்பான இந்தக் கார்கள் உலகின் விலை உயர்ந்த கார்களுள் ஒன்றாகும்.

1999 பிளைமவுத் ப்ரோலர் (1999 Plymouth Prowler)

இது ஒரு கிளாசிக் மாடல் ஆகும். இந்தக் காரின் மதிப்பு அறியப்படவில்லை. இந்த ப்ரோலர்ஸ் ஃபேக்டரி முடிக்கப்பட்ட ரேட் ராட் வடிவமைப்பு, பெயின் அண்ட் கெயின் படப்பிடிப்பில் ராக் கண்ணில் பட்டதாக நம்பப்படுகிறது.

பெராரி லா பெராரி

பெராரி லா பெராரி காரின் விலை ரூ.10 கோடி ஆகும். இந்தக் காரை ஃபெராரி நிறுவனமே தி ராக்கிற்கு அன்பளிப்பாக வழங்கியது.
அவர் வைத்திருக்கும் லாஃபெராரி வெள்ளை நிறத்தில் உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத்

ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பரத்தின் உருவகமாக கருதப்படுகிறது. இந்தக் காரின் விலை ரூ.2.5 கோடி ஆகும். இந்தக் காரில் தி ராக் பலமுறை வெளி இடங்களில் காணப்பட்டுள்ளார்.

லம்போர்கினி ஹுராகன் மற்றும் அவென்டடோர்

தி ராக் இரண்டு லம்போர்கினி ஹுராகன் மற்றும் அவென்டடோர் கார்களை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.8 கோடிக்கும் அதிகமானதாகும்.

ஃபோர்டு ஜிடி

ராக் ஃபோர்டு ஜிடியின் லிமிடெட் எடிஷனையும் வைத்துள்ளார். இதன் விலை ரூ.4 கோடி ஆகும்.

தி ராக் இது தவிர பென்ட்லி கான்டினென்டல் GT, Porsche Taycan, Chevrolet Chevelle, ரேஞ்ச் ரோவர் எஸ்விஆர் (Range Rover SVR), Ford F-150 மற்றும் Cadillac Escalade ஆகியவற்றையும் வைத்துள்ளார்.

தனது வீட்டுப் பணியாளருக்கு புத்தம் புதிய ஃபோர்டு எட்ஜ் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: The rocks car collection is worth over rs 60 crore