/tamil-ie/media/media_files/uploads/2022/12/Suchindram-Thanumalayan-Swamy-Temple-Hanuman.jpg)
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அமைந்துள்ள ஹனுமார் சிலை
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் காங்கேயத்தை சேர்ந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Suchindram-Thanumalayan-Swamy-Temple-1.jpg)
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் காணப்படும் சுசீந்திரம் தானுமாலையன் சுவாமி கோவிலில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதியிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதனையொட்டி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Anjaneyar-Jayanti.jpg)
இவ்வாறு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பாக ஒன்றரை டன் கடலை மாவு, ஐந்து டன் சீனி, 150 டின் எண்ணெய், 50 கிலோ ஏலக்காய், 50 கிலோ முந்திரிபருப்பு, 50 கிலோ நெய், 20 கிலோ கிராம்பு போன்றவைகளை கொண்டு ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் நடைபெற்று வருகிறது.
இந்த லட்டுகளை தயாரிப்பதற்காக காங்கேயம் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் பணி சுசீந்திரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த லட்டுகள் ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
செய்தியாளர் த.இ.தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.