scorecardresearch

இதுதான் கெமிஸ்ட்ரி! சேஸிங், ஃபைட்டிங் எல்லாம் முடிஞ்சது.. இப்போ ரொமான்ஸ் டைம்!

அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை.

Thendral vanthu ennai thodum serial
Thendral vanthu ennai thodum serial

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ஈரமான ரோஜாவே சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.

இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.

விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அதில் அபிநயா உயர்ந்த நீதிபதியின் மகள், அமெரிக்கா சென்று படித்தவள். தப்பு நடந்தால் தைரியமாக தட்டிக்கேட்கும் பெண். ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே மைனஸ்’ அபி ஒரு பழமைவாதி, பழைய கலாச்சாரங்களை நம்பக்கூடிய ஒரு பெண்.

அதனால் தான், தன் அனுமதி இல்லாமல், தன் கழுத்தில் தாலி கட்டியவனை காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுக்காமல், மஞ்சள் தாளி செண்டிமெண்டுடன் வாழ்கிறார்.

அவளுடைய கணவன் வெற்றியும்’ ஒரு லோக்கல் ரவுடி. அவனை சொந்த வீட்டிலேயே மதிக்கமாட்டார்கள். இப்போது தெரிந்தோ, தெரியாமலோ அபிநயாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் வேறுவழியில்லாமல் அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்.

இந்த சீரியலின் புரோமோ வெளியான புதிதில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கலாச்சாரத்துக்கும், குற்றத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்  பார்வையாளர்களை பின்நோக்கி சிந்திக்க வைக்கிறது என பலரும் புகார் கூறினர்.

ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்’ இந்த சீரியல் இன்றுவரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

எல்லா விஷயத்திலும் வெற்றிக்கு சப்போர்ட் ஆக இருக்கும் அபி’ அவன் ரோட்டில் ஒருவனை போட்டு புரட்டி எடுப்பதை பார்த்ததும், கணவன் என்றும் பார்க்காமல் போலீசில் புகார் செய்கிறாள். அவனை போலீஸ் கைது செய்கிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் வெற்றி வழக்கு விசாரணைக்கு வரும்போது’ அபி அவனுக்கு எதிராக பேசுகிறாள். அப்போது வெற்றி தரப்பில் வாதாட யாராவது வக்கீல் இருக்காங்களா என நீதிபதி கேட்க’ அங்கே ஒரு பெரிய ட்வீஸ்ட்.

நீதிபதியான அபியின் அப்பாவே வக்கீலாக வந்து’ வெற்றிக்கு ஆதரவாக வாதாடி அவன்மீது தப்பில்லை என்று நிரூபிக்கிறார். வெற்றி சிறையிலிருந்து வெளியே வர’ அபியை ஏதோ ஒரு கும்பல் கிட்னாப் செய்கிறது.

வெற்றிக்கு அபி இருக்கும் இடம் தெரியவர, உடனே அந்த இடத்துக்கு போகிறார். அப்போது அங்கிருக்கும் ரவுடிகள் வெற்றியை தாக்கவர, கோபத்தில் கர்ஜித்த வெற்றி’ இப்போ சொல்லு இந்த மாதிரி பொரிக்கிங்களை அடிச்சா தப்பில்லனு சொல்லு.. காப்பாத்துறேன்… என கத்த’ அதற்கு அபியும் அவங்களை அடிச்சு போடுனு சொல்ல’ ரவுடிகளை துவம்சம் செய்த வெற்றி’ அபியை காப்பாற்றுகிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். ஆனாலும் அந்த ரவுடி கும்பல்’ இருவரையும் விடவில்லை.

அவர்களிடம் இருந்து தப்பிக்க வெற்றியும், அபியும் ஏதோ ஒரு மலையை நோக்கி ஓட, அங்கும் அந்த கும்பல் வர’ இருவரும் புதருக்குள் சென்று ஒளிந்து விடுகின்றனர். அப்போது ரவுடிகள் கத்தியை தாறுமாறாக வீச’ அதில் ஒரு கத்தி வெற்றியின் கையை பதம் பார்த்து விடுகிறது. அதைப்பார்த்த அபிக்கு வெற்றியின் மீது சிம்பதி வருகிறது.

இப்போது இருவரும் அந்த மலையிலே குளித்து, சமைத்து, சாப்பிட்டு’ கனவிலேயே டூயட் வரை சென்று விட்டனர்.

இப்போது வெளியான புரோமோவில்’ மலையில் இருக்கும் வெற்றியும், அபியும் யானையின் சத்தம் கேட்க, அங்கிருந்து பயந்து ஓடிவரும் போது தெரியாமல் ஒரு குழிக்குள் விழுந்து விடுகின்றனர். பிறகு வெற்றியின் முதுகை பிடித்து ஏறி’ வெளியே வந்த அபி, தன் புடவையைக் கொடுத்து வெற்றியை வெளியே இழுக்கிறாள்.. இருவருக்கும் ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகும் போல தெரிகிறது.

கொடைக்கானல் மலையில் தான் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது. பவித்ராவும் அதே போலத்தான்..

குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். மேலும் இரவு’ ப்ரைம் டைமில் போடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனி’ மலையில் ஷீட்டிங் போது எடுத்த போட்டோக்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து’ புரொடக்‌ஷன் டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் வினோத்பாபு, தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில்’ வாட் எ டீம் வொர்க். லொக்கேஷன் போறதுக்கே லோ லோனு அலைஞ்சு, பலபேரு காயத்தோடு திரிஞ்சு, கிடைச்ச கேப்-ல தூக்கத்தை போட்டு’ மேப்-ல இல்லாத இடத்துல சாப்பாட போட்டு’ இப்படி நிறைய எஃபர்ட் போட்டு, வர போற எபிசோட்ஸ் பண்ணியிருக்கோம். தயவு செய்து பாருங்க மக்களே என எழுதிருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Thendral vanthu ennai thodum serial romance starts between abhi and vetri