Advertisment

கும்ப கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ. 3 லட்சத்துக்கு ஏலம்: பக்தர்கள் நெகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் கும்ப கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ. 3 லட்சத்திற்கு ஏலம் போனது நிகழ்வு குறித்து பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Theni murugan temple kumba kalasam thengai bid for Rs 3 lakh  Tamil News

தேங்காயை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து வாங்கி சென்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், போடி அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால சுப்பிரமணியன் கோவிலில் திருக்கல்யாணம் இன்று விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. 

அந்த தேங்காயை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து வாங்கி சென்றார். ஏலத்தொகைய அறிந்து மெய் சிலிர்த்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். 6 ஆயிரத்தில் தொடங்கி ஏலத்தொகை ரூ.3 லட்சத்தில் நிறைவு பெற்றது.

ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காய் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.65 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.3 லட்சம் வரை சென்றுள்ளது.

செய்தி: சக்தி சரவணன். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Theni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment