ஒரு முறை தென்னம் பாளையில் பாயாசம் செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தென்னம் பாளை தண்டுகள் 4
2 ½ கப் தேங்காய் பால்
2 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் முந்திரி
1 ஸ்பூன் திராட்சை
1 கப் சேமியா
2 கப் கட்டி தேங்காய் பால்
சர்க்கரை அரை கப்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்டு பகுதியை நீக்கி தென்னம் பாளையை சேர்த்து, தண்ணீர் ராக இருக்கும் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். தொடர்ந்து இதை வேக வைக்க வேண்டும். வெந்ததும் இதை அரைத்துகொண்டு, வடிகட்டி சாறை எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து அதில் சேமியாவை வறுக்க வேண்டும். தொடர்ந்து நாம் எடுத்து வைத்த தென்னம் பாளை சாறு சேர்த்து வேக வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் கட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். தொடர்ந்து சர்கக்ரை சேர்த்து கிளரவும். முந்திரி, திராட்சைகளை சேர்க்கவும்.