இந்த கார்த்திகை தீபத்திற்கு சுவையான, புது வித கொழுக்கட்டை செய்து பாருங்க. தெரளி இலை வைத்து கம கம கொழுக்கட்டை செய்யுங்கள்.
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 3 கப் வெல்லம்- 2 கப் பாசிப் பருப்பு- அரை கப் துருவிய தேங்காய்- 1 கப் ஏலக்காய் - கால் டீஸ்பூன் தெரளி இலை- தேவையான அளவு
செய்முறை
தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும். தண்ணீர் வடிகட்டி எடுக்கவும். மிக்சி ஜாரில் பச்சரிசி சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைத்த பச்சரிசி மாவை சலித்து எடுக்கவும். தனியாக வைக்கவும். அடுத்து வெல்லம் எடுத்து கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அடுப்பில் வைத்து வெல்லத்தை கரைக்கவும். பாகு காய்ச்சவும். வெல்ல பாகை வடிகட்டி எடுக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து பாசிப் பருப்பு சேர்த்து வறுக்கவும். அதை தனியாக வைக்கவும். அதே கடாயில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். இதையும் தனியாக வைக்கவும். தெரளி இலையில் கொழுக்கட்டை செய்யும் போது வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். தெரளி இலை கிடைக்க வில்லை என்றால் பனை, பலா மர இலையிலும் செய்யலாம். தென்னை ஓலை எடுத்து ஓலைகளை எடுத்து குச்சிகளை மட்டும் வைக்கவும். குச்சிகளை உடைத்து எடுக்கவும்.
இப்போது செய்து வைத்த பச்சரிசி மாவை எடுத்து அதில் வறுத்த பாசிப் பருப்பு, தேங்காய், ஏலக்காய் சேர்த்து கலக்கவும். அடுத்து வெல்ல பாகை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். நன்கு பிசைந்து எடுக்கவும். இப்போது இதை கையில் மாவு பிடித்து தெரளி இலையில் வைத்து மடிக்கவும். தேவையான வடிவத்தில் மடித்து எடுக்கலாம்.
அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி வைக்கவும். தண்ணீரில் தெரளி இலை குச்சி, இலைகளை சேர்த்து தட்டின் மேல் மீண்டும் இலைகளை வைக்கவும். இப்படி செய்தால் கொழுக்கட்டை வாசனையாக இருக்கும். இப்போது கொழுக்கட்டைகளை அதன் மேல் அடுக்கி வைத்து மூடி வைக்கவும். வேக வைத்து 20 நிமிடத்திற்கு பின் எடுத்தால் சுவையான கார்த்திகை தீப ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெடி. சுவையான சமையல் யூடியூப் பக்கத்தில் இந்த ரெசிபி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“