scorecardresearch

மார்பகம் பெரிதாக இயற்கையான வழி இருக்கு… இந்த உணவுகள் முக்கியம்!

நிகழ்கால பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தான உணவுகள் மற்றும் சீரான உடற்பயிற்சிகள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள முடியும்.

Breast Health
பெண்கள் உடல் ஆரோக்கியம்

பெண்கள் தங்களின் மார்பகங்களை அழகின் சாட்சியாக பார்க்கின்றனர். மற்ற பெண்களை விட தங்களின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் பலரும் விரும்புகின்றனர்.
விதிவிலக்காக பெரிய மார்பகங்களை வெறுக்கும் பெண்களும் இருக்கதான் செய்கிறார். எவ்வாராயினும், பெண்கள் தங்களின் மார்பகங்கள் குறித்து கவலைகளும் கொள்கின்றனர்.

தற்போதுள்ள சூழலில் பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள பல்வேறு அறிவியல் வசதிகள் வந்துள்ளன. ஆனால், பண்டைக் காலங்களிலும் மார்பகங்கள் பெருத்த அழகிய பெண்கள் இருந்துள்ளனர்.
அவர்கள் தங்களின் மார்பகங்களை திரட்சியாக காட்ட சிறந்த உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த வகையில் நிகழ்கால பெண்களும் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தான உணவுகள் மற்றும் சீரான உடற்பயிற்சிகள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்ள முடியும்.

இதில் முதன்மை உணவாக பால் உள்ளது. பால் அருந்துவதில் பெண்களின் மார்பகங்கள் இயற்கையிலேயே அதிகரிக்கின்றனவாம். ஏனெனில் பாலில் இயற்கையிலேயே ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், புரோலாக்டின் ஆகியவை உள்ளன.
இது பெண்களின் மார்பை பெரிதாக்குவதுடன் கருத்தரித்தலுக்கும் உதவுகிறது. ஆகவே பெண்கள் தங்களின் மார்பை பெரிதாக்கிக் கொள்ள பாலாடைக்கட்டி (சீஸ்), பன்னீர், யோகர்ட், நட்ஸ் உள்ளிட்ட உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் அருந்த விருப்பம் இல்லாதவர்கள் சோயா மில்க் அருந்தலாம். பால் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சத்துள்ள உணவாகும். இது தவிர மசாஜ் உள்ளிட்ட சில உடற்பயிற்சிகளும் உள்ளன. இந்த உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: There is a natural way to get bigger breasts these foods are important

Best of Express