கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பங்கேற்று போலீசாருக்கு தொப்பிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடலூர் நகரப்பகுதியில் போக்குவரத்து போலீசார் கோடை வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெர்மாகோலில் செய்யப்பட்ட நவீன தொப்பிகளை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கி அறிவுரை வழங்கினார்.
கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு கடலூர் போக்குவரத்து பிரிவு காவல்துறையினருக்கு இன்று தெர்மாகோல் தொப்பி, cooling Glass மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டன. கடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன்குமார், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.