பொதுவாக பலராலும் பாலியல் ஆசை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நம்மில் பலரும் உடலுறவுக்கான உந்துதல் தானாக வரும் என எதிர்பார்க்கிறோம். அது இல்லாதபோது, நாம் உடலுறவில் ஆர்வம் காட்டக்கூடாது என்று கருதுகிறோம்.
ஆனால் உண்மை அது அல்ல. இது குறித்து பாலியல் சிகிச்சையாளரும் உளவியலாளருமான நசானின் மோலி கூறுகையில், “முதலில், ஒருவர் உடலுறவு கொள்ள விரும்புவதற்கு முன்பு ஏதாவது நன்றாக உணர வேண்டும்” என்றார்.
மேலும், “மருத்துவப் பிரச்சனைகள், உறவுமுறை முரண்பாடுகள், நிதி மற்றும் வேலை அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், உடல் உருவப் பிரச்சனைகள், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் மக்கள் தங்கள் சமூக ஊடக சாதனங்களுடனான தொடர்புகள் போன்ற பிரச்னைகள் அனைத்தும் பாலுணர்வைத் தேடுவதில் அல்லது பெறுவதில் ஒருவரின் ஆர்வத்தை இழக்க பங்களிக்கின்றன” என்றார்.
பாலியல் சீண்டலுக்கு முன் நாம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
1) அடிப்படைத் தேவைகளை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள்
ஒருவர் தனது அடிப்படை தேவைகள் மீது கவனம் செலுத்தாத பட்சத்தில் அவர் அல்லது அவளுக்கு நல்ல உணர்வுகள் வருவது கடினம்.
2) கவர்ச்சி உணர்வுகள் அவசியம்
வேலை பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக கவர்ச்சி உணர்வுகள் வருவதில் தாமதம் ஏற்படலாம். அப்போது துணையிடம் கவனமாக செயல்பட வேண்டும்.
3) பாலியல் பாரம்பரிய உணர்வுகள்
உடலுறவு கொள்ளப் போகிறோம் அல்லது பாலியல் இன்பத்தை அனுபவிக்கப் போகிறோம் என்றால், அந்த அதிர்வை மாற்ற முயற்சிக்காமல், நீங்கள் ஏற்கனவே எந்த மனநிலையில் இருக்கிறீர்களோ, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
அதாவது பாலியல்’ பாரம்பரிய உணர்வுகள் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நடந்துகொள்ளுங்கள்.
4) உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்கள்
பாலியல் கற்பனைகள் என்பது மிக மிக இயல்பானது. எனினும் அவற்றால் சங்கடமாகவும், வெட்கமாகவும் அல்லது சங்கடமாகவும் உணர்கிறார்கள்.
அந்த மாதிரியான நேரத்தில் பாலியல் காட்சிகள் படங்களை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
5) சிற்றின்பத்தைப் படிக்கவும்
ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் சிற்றின்ப ஆடியோ கதையைக் கேளுங்கள் அல்லது படியுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எங்கள் கற்பனையில் மூழ்கும் நேரம் உங்களின் துணையை நினைத்துக் கொள்ளுங்கள்.
6) உங்கள் சூழலை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குங்கள்
நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே சூழலில் வாழ்கிறீர்களா, வேலை செய்கிறீர்களா? உங்கள் மனைவியுடன் இணைந்து சூழலை மாற்றப் பாருங்கள்.
ஒரு மெழுகு வர்த்தி, வாசனை திரவியம், பஞ்சு தலையணை கூட உங்களின் சூழலை மாற்றியமைக்கும்.
7) உங்களை நீங்களே உயர்வாக எண்ணிக் கொள்ளுங்கள்
இது மிகவும் முக்கியத்துவம் மற்றும் சக்தி வாய்ந்தது. முதலில் உங்கள் உடலையும், துணையின் உடலையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இதை தினமும் பயிற்சிப் போல் செய்யுங்கள். தினமும் உங்களால் முடியும் என்ற பாஸிடிவ் எனர்ஜியை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
இது உங்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு பலன் அளிக்கும். நீங்களு்ம் மகிிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil