வெயில் காலம் தொடங்க இருப்பது என்பதால் நாம் புத்துணர்வாக இருப்பதற்கும் சில பானங்களை நாம் எடுத்துகொள்ளலாம். இந்நிலையில் இதை நாம் காலையில் எடுத்துகொண்டால் மிகவும் நல்லது.
இளநீர் குடிப்பதால், நம்மை வரட்சியடையாமல் பார்த்துகொள்ளும். ஜீரணத்தை அதிகப்படுத்தும். காலை உடல் பயிற்சி முன்பாக இதை நாம் எடுத்துகொண்டால், உடல் பயிற்சிக்கு முழு வேகத்தில் செய்ய முடியும்.
இதில் அதிக பொட்டஷியம், சோடியம், மெக்னீஷியம் உள்ளிட்ட எலக்ரோலைட் உள்ளது. இதனால் உடல் இழந்த நீரை மற்றும் எலக்ட்ரோலைட்டை மீண்டும் பெற உதவும். மேலும் இதில் சைடோகினின்ஸ் உள்ளது, இவை வயதாவதை தள்ளிப்போடும் பண்புகள் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக உடல் நன்றாக இருக்கும்.
இந்நிலையீல் 30 எம்.எல் நெல்லிக்காய் சாறில், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறை சேர்த்து குடித்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும்.
இஞ்சியில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள், ஜீரணத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். நெல்லிக்காயில் விட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் சளி, அலர்ஜி ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“