கொரோனா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு எதை எடுத்துக்கொள்வது என்பதில் கவனம் செலுத்தும் நேரத்தில் என்ன சாப்பிடக்கூடாது என்பதை மறந்து விடுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை இழக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய 5 பொதுவான உணவுகள் பற்றி காண்போம்.
சர்க்கரை: அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு நல்லது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, நெக்ரோஸிஸ் ஆல்பா கட்டி , சி-ரியாக்டிவ் புரோட்டீன் மற்றும் இன்டர்லூகின்-6 போன்ற அழற்சி புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
உப்பு : அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும். சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும். உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி பெரியவர்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய அதிகபட்சம் ஐந்து கிராம் உப்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தோராயமாக ஒரு டீஸ்பூன் அளவாகும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் குளுக்கோகார்டிகாய்டு (glucocorticoid ) அளவு அதிகரிக்கும்.
எண்ணெயில் பொறித்த உணவுகள் : வறுத்த உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆய்வின்படி, வறுத்த உணவை சாப்பிடுவது கடுமையான இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உண்டாகும்.பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் அல்லது டீப் ஃபிரை செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவது ஆபத்து. எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது.
ஆல்கஹால் : ஆல்கஹால் அதிகமாக உட்கொள்ளும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். குறிப்பிட்ட அளவை (பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பானம், ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்கள்) தாண்டி எடுத்தால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். மேலும் நிமோனியா மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கு ஒருவர் எளிதில் பாதிக்கப்படுவார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கஃபைன் : அதிக காபி / தேநீர் உட்கொள்வது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும். இதனால் அழற்சி செயல்பாடுகள் தடைபடலாம். இதனால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். எனவே கஃபைன் உணவுகளை தவிருங்கள். காஃபி, டீயையும் தவிர்ப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.