உங்கள் நெத்தியில் கோடுகள், காகங்களின் பாதம் போல கண்களுக்கு அருகில் இருக்கும் சுருக்கங்கள் வயதாவதால் ஏற்படும். இந்நிலையில் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்த சுருக்கங்கள் ஏற்படும் காலத்தை நாம் தள்ளிவைக்க முடியும்.
இந்நிலையில் நாம் இந்த சுருக்கங்கள் ஏற்பட என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதிக அளவில் வெயிலில் சுற்றுவது. நாம் சன்ஸ்கிரீன் அல்லது துணியை பயன்படுத்தி உடலை சூரிய கதிர்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளாமல் இருந்தால் சீக்கிரமாக வயதான தோற்றம், சுருக்கங்கள் ஏற்படும்.
நமக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது கொலஜனை தாக்கும். மேலும் சருமம் சுருங்கி விரிதலை பாதிக்கும். இதனால் சீக்கிரமாக வயதான தோற்றம், சுருக்கங்கள் ஏற்படும்.
சரியான உணவுகளை எடுத்துகொள்ளாமல் இருப்பது, சத்துகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் எடுத்துகொள்ளாமல் இருந்தால் இந்த நிலை ஏற்படும். சில நேரங்களில் நமது முக பாவனைகள் கூட சுருக்கங்களை ஏற்படுத்தும்.
கருவளையம், சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய முடியும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். அதிக எஸ்.பி.எப் உள்ள சன்ஸ்கிரினரை பயன்படுத்தலாம்.
வைட்டமின்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ள உணவுகளை நாம் சாப்பிடலாம். அதிக தண்ணீர் குடிப்பது, புகைப்பிடித்தலை நிறுத்திகொள்வது.
மேலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துகொள்ளும் மாயிஸ்டுரைசர்ஸ் பயன்படுத்தலாம். ரெட்டினால் ( retinol) என்ற பொருள் நமது கொலஜனை உற்பத்தியை தூண்டும்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“