உடல்சூடு குறைய இந்த சத்துகள் முக்கியம்… எந்தெந்த உணவுகளில் இருக்கு தெரியுமா? டாக்டர் பிள்ளை
உடல்சூட்டை குறைப்பதற்கு அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதன் மூலம் கிடைக்கும் சத்துகள் குறித்து மருத்துவர் பிள்ளை கூறும் தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
உடல்சூட்டை குறைப்பதற்கு அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதன் மூலம் கிடைக்கும் சத்துகள் குறித்து மருத்துவர் பிள்ளை கூறும் தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
உடல்சூடு குறைய இந்த சத்துகள் முக்கியம்… எந்தெந்த உணவுகளில் இருக்கு தெரியுமா?
உணவுப்பொருள்கள் சூடாக இருக்க வேண்டும் என்பது பலரின் தேர்வு. ஆனால், உடல் சூடு அனைவருமே குறைக்க வேண்டியது. உடல்சூடு ஏற்படுத்தும் அசௌகர்யங்களும் பிரச்னைகளும் பல. உடல் உபாதைகளுக்கு நேரடி காரணமாகவும் இது இருக்கிறது. உடல்சூட்டை குறைப்பதற்கு அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதன்மூலம் கிடைக்கும் சத்துகள் குறித்து மருத்துவர் பிள்ளை கூறும் தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
சத்து குறைப்பாட்டுக்கு உடல்சூட்டிற்கும் சம்பந்தம் உள்ளது. எனவே, சத்துகள் நிறைந்த உணவுகளை அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும்போது உடல் சூடு குறைந்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம். 5 வகையான உணவுகள் பற்றி மருத்துவர் பிள்ளை விளக்கி கூறுகிறார்.
1. ஹைட்ரேட்டிங் நியூட்ரிஷன்:
உடலில் தண்ணீர் அதிகம் தேவைப்படுவது ஹைட்ரேட்டிங் நியூட்ரிஷன் என சொல்லலாம். இதில், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், தண்ணீர் ஆகிய 4 ஆகும். இளநீர், வாழைப்பழம், வெள்ளரி, தர்பூசணி, கீரை இவற்றில் எல்லாம் இந்த நியூட்ரிஷன் அதிகமாக உள்ளது.
Advertisment
Advertisements
2. கூலிங் மினரல்ஸ்:
மெக்னீசியம் சத்து நமது நரம்பை துரிதப்படுத்தி, உடலை குளிர்விக்கிறது. கால்சியம் சத்து உடலின் வெப்பநிலையை பராமரிக்கிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பேரிச்சம்பழம், பச்சை காய்கறிகள், கீரைகளிலும் கால்சியம் சத்துகள் அதிகளவில் உள்ளன. நட்ஸ் & சீட்ஸ், கீரைகளில் மெக்னீசியம் சத்து அதிகளவில் உள்ளது.
3. ஆண்டி ஆக்சிடெண்ட்:
ஆக்சிடெண்ட்என்பது உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். வைட்டமின்கள், பிளாவனைட்ஸ், பாலி பீனால் , வைட்டமின் சி ஆகியவை ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ள பொருட்கள். கிரேப்ஸ், ஆரஞ்சு, லெமன், புதினா, நட்ஸ் & சீட்ஸ், அவகோடா பழங்கள் ஆகியவற்றிலும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் அதிகளவில் உள்ளது.
4. நீர் நிறைந்த பழங்கள்:
நீர் நிறைந்த பழங்களை அன்றாட நாம் சாப்பிடும்போது உடல்சூடு குறைய வாய்ப்புள்ளது. வெள்ளரி, தர்பூசணி, கீரை ஆகியவற்றில் நீர்சத்துகள் அதிகளவில் உள்ளன.
5. ஹெர்ப்& ஸ்பைசஸ்:
மெந்தால் அதிகமுள்ள புதினா, கொத்தமல்லி, கற்றாழை ஆகியவை உடல்சூட்டை குறைப்பதில் ஹெர்ப்&ஸ்பைசஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை சாப்பிட்டு வரும்போது உடல்சூடு குறையும், மாத்திரைகள் தேவை இல்லை என்கிறார் மருத்துவர் பிள்ளை.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.