வெங்காயம் உரிச்சா கண்ணீர் வருவது ஏன்? எப்பவாவது இதை யோசிச்சீங்களா?

வெங்காயத்தின் செல்கள் கத்தியால் அறுக்கும் போது உடைந்து, அதிலுள்ள இரசாயனச் சேர்மங்கள் வெளியேறுகின்றன. அதில் முக்கியமானது ப்ரோபனெத்தியால் எஸ்-ஆக்சைடு (Propanethial S-oxide) எனப்படும் சேர்மமாகும்.

வெங்காயத்தின் செல்கள் கத்தியால் அறுக்கும் போது உடைந்து, அதிலுள்ள இரசாயனச் சேர்மங்கள் வெளியேறுகின்றன. அதில் முக்கியமானது ப்ரோபனெத்தியால் எஸ்-ஆக்சைடு (Propanethial S-oxide) எனப்படும் சேர்மமாகும்.

author-image
Mona Pachake
New Update
download (45)

சமையலறையில் வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் வருவது அனைவருக்கும் பழக்கமான அனுபவம். ஆனால், இப்போது விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தையும், அதிலிருந்து தப்பிக்க கூடிய வழியையும் விளக்கி உள்ளனர். அமெரிக்காவில் வெளியான ப்ரோஸெட்டிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் இதழின் அக்டோபர் 21 தேதியிலான பதிப்பில் வெளியாகியுள்ள புதிய ஆய்வின் படி, கூர்மையான கத்திகளால் மெதுவாக வெங்காயத்தை நறுப்பது கண்ணீரைத் தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஆய்வின்படி, வெங்காயத்தின் செல்கள் கத்தியால் அறுக்கும் போது உடைந்து, அதிலுள்ள இரசாயனச் சேர்மங்கள் வெளியேறுகின்றன. அதில் முக்கியமானது ப்ரோபனெத்தியால் எஸ்-ஆக்சைடு (Propanethial S-oxide) எனப்படும் சேர்மமாகும். இது காற்றில் சிறு துளிகளாக பரவி, நமது கண்களில் உள்ள நரம்புகளைத் தாக்குகிறது. இதன் விளைவாக கண்களில் எரிச்சலும், கண்ணீரும் ஏற்படுகின்றன.

இந்த ஆய்வை நடத்தியவர் அமெரிக்காவின் நீட்ஹாம் (Needham, Massachusetts) நகரில் உள்ள SharkNinja நிறுவனத்தின் இயற்பியலாளர் நவீத் ஹூஷாங்கினெஜாட் (Navid Hooshanginejad). இவர் தனது கார்்னெல் பல்கலைக்கழக (Cornell University) காலத்தில் வெங்காயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். ஒரு நாள் சாலடுக்கு வெங்காயம் நறுக்கும் போது, அந்தச் சாறுகள் அவரது கைகளில் படிந்தன. அதே சமயம் ஒரு கேள்வி அவருக்கு தோன்றியது: “இந்தத் துளிகள் காற்றில் உயரமாக பறந்து என் கண்களில் படும்வரை போகிறதா?”

அந்த எண்ணத்திலிருந்தே இந்த ஆய்வு தொடங்கியது. அடுத்த நாள், 10 பவுண்டு நிறையுள்ள வெங்காயங்களை ஆய்வுக்கூடத்துக்குக் கொண்டு வந்து, உயர் வேகக் கேமராவுடன் நறுக்கத் தொடங்கினார். அதன் பிறகு, சிறிய அளவிலான ஒரு “கில்லோட்டின்” மாதிரி கருவி தயாரித்து, வெவ்வேறு கூர்மை கொண்ட கத்திகளைப் பயன்படுத்தி வெங்காயத்தை நறுக்கி, அதன் போது உருவாகும் துளிகள் எவ்வாறு பறக்கின்றன என்பதைப் பதிவு செய்தனர்.

Advertisment
Advertisements

அவர்கள் கண்டுபிடித்தது என்னவெனில் — மங்கலான கத்திகள் (blunt knives) வெங்காயத்தின் தோலை கிழிக்க அதிக அழுத்தம் தேவைப்படுவதால், அதன் செல்கள் அதிகமாக நசுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வெங்காயச் சாறு அதிகமாக பீய்க்கப்படுகிறது. ஆய்வில், மந்தமான கத்திகளால் வேகமாக வெட்டும்போது வெங்காயச் சாறு 40 மீட்டர் உயரம் வரை பீச்சு போனது — இது ஒரு பெரிய மரத்தின் பாதி உயரம் ஆகும்! அதே சமயம், கூர்மையான கத்திகளால் மெதுவாக வெட்டினால் அந்தத் துளிகள் கண் உயரத்தை எட்டாது, அதனால் கண்ணீரும் வராது.

இதுகுறித்து மின்னசோட்டாவின் ரோசெஸ்டர் நகரில் உள்ள Mayo Clinic நிறுவன இயற்பியலாளர் ஜிம் வில்கிங் கூறியதாவது: “இது நீர் நிரப்பிய பலூனை ஊசி கொண்டு குத்துவதுபோல் தான். ஊசி கொண்டு குத்தினால் சிறிது அழுத்தம் போதும்; ஆனால் விரலால் அழுத்தினால் பலூன் உள்ளே அதிக அழுத்தம் உருவாகி நீர் தூரம் பீய்க்கும்.”

வெங்காயத்தின் இந்த அழுத்த முறை (pressurized system) நுண்ணிய துளிகள் எவ்வாறு பறக்கின்றன மற்றும் தூரம் எட்டுகின்றன என்பதைப் பற்றி புதிய புரிதலை வழங்குகிறது. இதன் மூலம் வெங்காயம் மட்டுமல்லாமல், பாதோகன்கள் (pathogens) எனப்படும் நோய்த் தொற்று கிருமிகள் உயிரியல் அமைப்புகளில் எவ்வாறு பரவுகின்றன என்பதையும் விஞ்ஞானிகள் விளக்க முடியும் என ஹூஷாங்கினெஜாட் கூறினார்.

இதனால், இனி வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வடிக்க வேண்டாம் — கூர்மையான கத்தியை எடுத்துக் கொண்டு மெதுவாக வெட்டினால் போதும்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: