கைகளில் ஓட்டாமல் முட்டை உடைக்க: சூப்பர் 3 கிச்சன் டிப்ஸ்
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, சமையல் குறிப்புகளைச் சோதிப்பது மற்றும் அன்பானவர்களுக்கான உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். இருப்பினும், சமைப்பது, சேமித்து வைப்பது அல்லது தயாரிப்பது சில சமயங்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
Advertisment
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
பழங்களை ஸ்மார்ட்டாக சேமிக்கவும்
பழங்களை நன்கு கழுவி, உலர்த்தி, ஃபிரிட்ஜில் சேமிக்கவும். வாழைப்பழம் போன்ற பழங்கள், விரைவாக பழுக்காமல் இருக்க, எத்திலீன் வாயு வெளியாவதை நிறுத்த செலோபேன் தாளால்’ முனைகளை மூடவும். மாறாக, வாழைப்பழங்கள் விரைவாக பழுக்க வேண்டுமெனில், அவற்றை ஒரு இரவு முழுவதும் காகிதப் பையில் வைக்கலாம்.
முட்டைகளுடன் போராட வேண்டாம்
முட்டை சமைக்கும் போது, அதனை உடைக்க முட்டை ஓடுகளுடன் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் அது கைகளில் ஓட்டி பிசுபிசுப்பானதாக உணரலாம். இதைத் தவிர்ப்பதற்கு’ முட்டை ஓட்டை உடைப்பதற்கு முன், உங்கள் கைகளை தண்ணீரில் நனைக்கவும். இதன்மூலம்’ உங்கள் விரல்களில் முட்டை ஒட்டாமல் இருக்கும்.
இப்படி சீஸ் சீவுங்கள்
நீங்கள் சீஸ் உணவை விரும்பினால், சீஸ் துருவல்’ எவ்வளவு குழப்பமாக இருக்கும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். சீஸ் துகள்கள் பொதுவாக கிரேடர் (grater) மீது சிக்கி, அதை நீக்க மிகவும் கடினமானதாகிவிடும். இது நிகழாமல் இருக்க, நீங்கள் துருவத் தொடங்குவதற்கு முன், கிராட்டரின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவலாம். நீங்கள் அதை செய்ய மறந்துவிட்டால், உருளைக்கிழங்கை ஒரு சிறிய துண்டுகளாக வெட்டி, அதை கிராட்டர் மூலம் துருவவும். இது அனைத்து சீஸ் துகள்களும் அகற்றப்படுவதை உறுதி செய்யும், கழுவுவது எளிதாக இருக்கும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“