தினம் தூங்கும் முன், சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று சொல்லலாம். அவசியம் என்பதைக் காட்டிலும் உங்களுக்கு நல்லது என்று சொல்லலாம். அது என்னவென்று, இன்று நீங்கள் தூங்கும் முன்பு பார்த்துவிட்டுச் செல்லுங்கள்,
நீங்கள் உறங்க பயன்படுத்தும் தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது நல்லது. ஏனெனில், இவை உங்களின் சருமத்தில் சுருங்கங்களை ஏற்படுத்தக் கூடும். மேலும், பட்டு நூலினால் நெய்த தலையணையை பயன்படுத்துவது சிறந்தது. இது சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இரவில் நல்ல உறக்கம் இருந்தால் நமது முகம் அழகாக இருக்கும். இந்த பலனை முழுமையாக அடைய தண்ணீர் நல்ல மருந்தாக இருக்கும். இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால் உடல்நலம் சீராக இருக்கும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெது வெதுப்பான நீரில் ஒரு குளியலை போடுங்கள். இது நல்ல உறக்கத்தை தந்து, சரும பாதுகாப்பையும் தரும். இதனால் பருக்கள், முக வறட்சி போன்றவை ஏற்படாது.
இது தான் ரொம்ப முக்கியமான சமாச்சாரம். தூங்க செல்லும் போது மொபைலை நோண்டிக் கொண்டே இருக்காதீர்கள். மேலும், உங்கள் படுக்கைக்கு அருகில் மொபைலை வைக்காமல், சற்று தூரமாக வைத்து தூங்கினால் நல்லது. தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை கணினி, மொபைல், தொலைக்காட்சி ஆகியவற்றை பார்ப்பதை தவிருங்கள். மிக அருகிலான வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு தூங்கினால் தான் கண்களுக்கு நல்லது.