கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.
நாளை (நவ.26) திருக்கார்த்திகை தீபத் திருநாள்.
இந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி தென்னாடுடைய சிவபெருமானை முழு மனதுடன் வணங்கி வழிபடுங்கள்.
திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அந்த வேளையில், உங்கள் இல்லத்தில் மறக்காமல் விளக்கேற்றுங்கள். ஒவ்வொரு விளக்கிலும் சக்தி குடியேறுகிறாள் என்பதாக ஐதீகம். அது சிவசக்தியாக இருந்து, உங்கள் இல்லத்தையே வலுவாக்கிக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
விளக்கு ஏற்றும் முறை
/indian-express-tamil/media/media_files/XdA3djd1QUtuKHTVcw0E.jpg)
விளக்குகளை நன்றாக கழுவ வேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. விளக்கு ஏற்றும் முன் அதற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது.
விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை, தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.
தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.
திருக்கார்த்திகை என்றில்லாமல், எல்லா நாளும் வீட்டில் விளக்கேற்றுங்கள். இதனால் குலம் தழைக்கும். ஐஸ்வரியம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“