/tamil-ie/media/media_files/uploads/2021/07/Rk.jpg)
Thirumagal Serial Actress Rekha Krishnappa Personals Tamil News
Thirumagal Serial Actress Rekha Krishnappa Personals Tamil News : தெய்வமகள் தொடர் மூலம் அண்ணியாராக பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா. தற்போது திருமகள் தொடரில் வில்லி மாமியாராக நடித்து மிரட்டி வருகிறார். கல்லூரி படிக்கும் மாணவிக்குத் தாயாக இருக்கும் ரேகா, தன்னுடைய ஸ்கின்கேர் மற்றும் ஷாப்பிங் மீதுள்ள ஆசை பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Rk1.png)
"ஆரோக்கியமான உடல் மற்றும் சருமத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயங்கள், நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நன்றாகத் தூங்குவது. இது இரண்டும் இல்லாமல் நான் இல்லை. அதனுடன் பழங்கள், பாதம் மற்றும் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Rk2.png)
அதேபோல, அதிகப்படியான மேக்-அப் போடுகிறவர்கள் நிச்சயம் அதனை அகற்றாமல் தூங்கப் போகக்கூடாது. நான் எப்போதுமே இரவு நேரத்தில், எந்தவிதமான க்ரீம் அல்லது ஜெல் பொருள்களை அப்லை செய்யமாட்டேன். நம் சருமம் கொஞ்சமாவது சுவாசிக்கவேண்டும். அப்போதுதான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Rk3.png)
என்னுடன் நான் எப்போது வைத்துக்கொள்ளும் ஓர் மேக்-அப் பொருள் என்றால், அது லிப்ஸ்டிக்தான். எல்லா விதமான லிப்ஸ்டிக் என்னிடம் இருக்கும். தற்போது அனைவரும் பயன்படுத்தும் நியூட் நிறங்கள் எனக்கு பிடிக்காது. செட் ஆகவும் செய்யாது. எப்போதுமே டார்க் நிறங்கள்தான் என்னுடைய சாய்ஸ். ஆனால், சீரியல்களில் ஓரளவிற்கு லைட் நிறங்களைத்தான் தேர்வு செய்வேன்.
ஷாப்பிங் செய்யாமல் என்னால் இருக்கவே முடியாது. இந்தக் கடையில்தான் பொருள்களை வாங்குவேன் என்று எனக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. பொருள் பிடித்திருந்தால், அது எந்த இடம் என்றாலும் வாங்கிவிடுவேன். மால், பிளாட்ஃபார்ம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதிலும் எனக்கு ஹேண்ட்பேக் நிறையப் பிடிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.