Advertisment

'அந்தரங்க விஷயங்கள் பற்றியும் கேட்டிருக்கிறாள்' - அண்ணியாரின் குழந்தை வளர்ப்பு குறிப்புகள்!

Thirumagal Serial Rekha Parenting guidance என் மகளே அவளுடைய தொலைப்பேசியை என்னிடம் காண்பிப்பாள். யாருடன் பேசியிருக்கிறாள் என்பதையெல்லாம் நான் கண்காணிப்பேன்.

author-image
WebDesk
New Update
Thirumagal Serial Rekha Parenting guidance Tamil News

Thirumagal Serial Rekha Parenting guidance Tamil News

Thirumagal Serial Rekha Parenting guidance Tamil News : தெய்வமகள் தொடரில் 'அண்ணியார்' எனப் புகழ்பெற்ற ரேகா, தற்போது 'திருமகள்' தொடரில் வில்லி மாமியாராக வந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார். பதின்பருவ மகளுக்கு உண்மையிலேயே தாயாக இருக்கும் இவர், சமீபத்தில் தன் மக்கள் பூஜாவோடு இணைந்து குழந்தை வளர்ப்பு பற்றிய டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டார். வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழ்நிலை, நாம குழந்தைகளைச் சீரழிக்கும் இந்த காலத்தில், அவர்களுடைய குறிப்புக்கள் நிச்சயம் பல பெற்றோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisment
publive-image

"நான் என்னுடைய மகளுக்கு சிறந்த தோழி என்றுதான் சொல்லுவேன். பெற்றோர்கள் நண்பர்கள் போன்று பழகினால் நிச்சயம் அவர்களுடைய உலகத்தில் பயணம் செய்வது மிகவும் எளிது. என மகளுக்கு வெளியே இருந்து பல விஷயங்கள் தெரிவதற்குள், அவற்றையெல்லாம் நானே சொல்லிக்கொடுத்துவிடுவேன். இந்தக் காலத்துப் பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம். அதையும் சேர்த்துப் பழகவேண்டும்.

publive-image

நான் மட்டுமல்ல. என் கணவரும் அப்படிதான். வீடுதான் முதல் பள்ளி, பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர்கள் என்பதை நாங்கள் பின்பற்றுகிறோம். அந்தரங்க விஷயங்கள் உட்பட எல்லாவற்றையும் என்னோடு பேசும் அளவிற்கு என் மகளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அந்தந்த வயதில் என்ன வ்ஸ்=விஷயங்கள் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டுமோ, அத்தனையும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

publive-image

அதேபோல, என் மகளும் நிறைய இன்டிமேட் விஷயங்கள் எல்லாம் கேட்டிருக்கிறாள்.  அப்பொழுதெல்லாம்,அதற்கான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, இந்த வயதில் இதனைப் புரிந்துகொள்வது கடினம். நிச்சயம் ஒரு கட்டத்தில் புரியும் என்று விளக்கம் சொல்லிவிடுவேன். தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தைகளின் போக்கை மாற்றியமைத்திருக்கிறது. அதனால், தினமும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, மனம் விட்டுப் பேசுவது அவசியம்.

publive-image

'இது வேண்டாம்' என்று சொன்னால்தான் அதன் மேல் அதிக ஈடுபாடு வரும். அந்த கியூரியாசிட்டி நமக்கே இருக்கும்போது, இளம் வயதினருக்கு அதிகம் இருக்கும். அதனால், பதின்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, வெட்கம் தவிர்த்து எல்லாவற்றையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு பேசவேண்டும். என் மகளே அவளுடைய தொலைப்பேசியை என்னிடம் காண்பிப்பாள். யாருடன் பேசியிருக்கிறாள் என்பதையெல்லாம் நான் கண்காணிப்பேன். ஏதாவது தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள சொல்லுவேன்" என்பதோடு நிறைவு செய்கிறார் ரேகா.

publive-image

"என் அப்பா அம்மா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் அவர்களோடு நான் பகிர்ந்துகொள்வேன். என் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் என்னுடைய ப்ரைவசிக்குள்ளேயும் வந்ததில்லை. இப்படிப்பட்ட அம்மா அப்பா கிடைத்ததுக்கு நான் ரொம்ப லக்கி" என்கிறார் ரேகாவின் மகள் பூஜா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Tamil Serial Thirumagal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment