காபி பொடி, தேன், தயிர் போதும்.. பளபளக்கும் சருமம் நிச்சயம் – திருமணம் ஷ்ரேயாவின் ஹோம் ரெமடிஸ்

Thirumanam fame Shreya Anchan Beauty Secrets Home Remedies Tamil News காபி பொடி மற்றும் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்யலாம். இது சிறந்த ஸ்க்ரப்.

Thirumanam fame Shreya Anchan Beauty Secrets Home Remedies Tamil News
Thirumanam fame Shreya Anchan Beauty Secrets Home Remedies Tamil News

Thirumanam fame Shreya Anchal Beauty Tips Tamil : மங்களூரிலிருந்து ‘திருமணம்’ சீரியல் மூலம் தினம் தினம் தமிழ்நாட்டு மக்களின் வீடுகளுக்குச் சென்ற ஷ்ரேயா ஆன்ச்சன், தமிழ்நாட்டு மருமகளாகவே ஆகப்போகிறார். தன்னுடன் இணைந்து நடித்த சித்துவையே விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் ஷ்ரேயா. எபோதும் ‘பளீச்’ லுக்கிலேயே இருக்கும் ஷ்ரேயா, தன்னுடைய பியூட்டி சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார்.

Thirumanam fame Shreya Anchan and Siddhu

“பியூட்டி டிப்ஸ் என்று பெரிதாக எதுவுமில்லை. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். நான் காலையில் எழுந்ததும், முகத்தை நன்கு கழுவி க்ளென்சிங் செய்வேன். பிறகு மாய்ஸ்ச்சரைசர் மற்றும் லிப் பாம் போட்டுக்கொள்வேன். அதேபோல இரவு தூங்குவதற்கு முன்பு, முகத்தைக் கழுவி, க்ளென்ஸ் செய்து நைட் க்ரீம் மற்றும் லிப் பாம் போடுவேன். அவ்வளவுதான் என்னுடைய ரொட்டின்.

Shreya Anchan Beauty Tips

வீட்டிலிருந்தபடியே சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏராளமான வழிமுறைகள் உள்ளன. சமையலறையில் இருக்கும் பொருள்களே போதும். தக்காளியை எடுத்து முகத்தில் தேய்த்து க்ளென்ஸ் செய்துவிட்டு, அதன் பிறகு காபி பொடி மற்றும் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்யலாம். இது சிறந்த ஸ்க்ரப்.

Thirumanam Shreya Anchan

அதேபோல தயிர் மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் அப்லை செய்து ஊறவைத்துக் கழுவலாம். பின்பு கற்றாழை மற்றும் வைட்டமின் E கேப்சியூல் கலந்து முகத்தில் அப்லை செய்யலாம். இதையெல்லாம் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். இதுவே போதும். வெளியே சென்று வந்தால், உடனே முகத்தைக் கழுவுங்கள். நிச்சயம் மாற்றங்கள் தெரியும்”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thirumanam fame shreya anchan beauty secrets home remedies tamil news

Next Story
காலையில் பூண்டு, தண்ணீர்… என்ன நன்மைகள்? எப்படி பயன்படுத்துவது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com