Thirumurugan nathaswaram metti oli gopi sun tv vijay tv hotstar - சீரியலையே லைவாக எடுத்த ஒரே நாயகன்! - Satellite Star 'மெட்டி ஒலி' கோபி
தமிழ் சீரியல்களுக்கு பிள்ளையர் சுழி போட்ட ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், அந்த சுழியை 1356 பக்கங்களுக்கு இட்டுச் சென்ற ஒரு சாதனையாளர் திருமுருகன். இல்லை இல்லை 'மெட்டி ஒலி' திருமுருகன்... இல்லை இல்லை 'நாதஸ்வரம்' திருமுருகன்.... இல்லை இல்லை 'எம்டன் மகன்' திருமுருகன்...
Advertisment
இவரை எப்படியென்று அழைப்பது? காரைக்குடியில் இருந்து வந்து சின்னத்திரையை தனது இயக்கத்தால் ஆண்டுக் கொண்டிருக்கிறார்.
சாதிப்பதற்கு திறமை மட்டுமே போதுமானது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்.
1995 முதல் 97 வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான கோகுலம் காலனி தான் திருமுருகனின் முதல் சீரியல். இவர் கமிட்டான இரண்டாவது சீரியல் இவர் வாழ்க்கையையே திருப்பி போடப் போகிறது என்பது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்காது.
Advertisment
Advertisements
அம்மி... அம்மி... அம்மி மிதிச்சு... என்று தொடங்கும் 'மெட்டி ஒலி' சீரியலை 2002ம் ஆண்டு இயக்கத் தொடங்கினார் திருமுருகன். இம்முறை அவருக்கு கைக் கொடுத்தது சன் டிவி. சொல்லவா வேண்டும்? தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பக்கா Connectivity ஆகி ஒலித்தது மெட்டி ஒலி. இந்த கனெக்டிவிட்டி இருக்கே.. அதுதான் சீரியலுக்கு ரொம்ப முக்கியம். ஏனெனில், சினிமா என்பது மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும் சமாச்சாரம்.
ஆனால், நாடகம் அப்படியல்ல. தினம் தினம் உங்கள் கருவிழிகளுக்கு வேலை வைக்கும். சீரியல் நன்றாக இருந்தால், உங்கள் கருவிழி - டிவி Connectivity நூறு சதவிகிதம் சிங்க் ஆகிவிடும். அப்படியில்லை எனில், கடையை சாத்திட்டு கிளம்ப வேண்டியது தான். இந்த கனெக்டிவிட்டி கிங் தான் திருமுருகன்.
2002-2005 வரை ஒளிபரப்பான மெட்டி ஒலி மொத்தம் 800 எபிசோடுகளுடன் மெகா ஹிட் அடித்தது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
பிறகு 2006ல் பரத்தை வைத்து 'எம்டன் மகன்' எனும் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெயினர் படத்தை எடுத்து பிக் ஸ்க்ரீன்லும் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.
அதன்பிறகு 2010-2015 வரை மொத்தம் 1356 எபிசோடுகளுடன் பட்டையைக் கிளப்பிய நாதஸ்வரம் சீரியலை இயக்கி மிரள வைத்தார் திருமுருகன். இந்த மெகா சீரியலின் 1000மாவது எபிசோடை 23 நிமிடங்கள் 25 நொடிகள் நேரடியாக காட்சிப்படுத்தி கின்னஸ் சாதனைப் படைத்தார்.
இயக்குவதோடு மட்டுமில்லாமல், நடிக்கவும் செய்து தன்னை நிரூபித்த திருமுருகனுக்கு சின்னத்திரை இண்டஸ்ட்ரியில் உள்ள பெயர் என்ன தெரியுமா?
"Satellite Star".
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news