இது திருநெல்வேலியில் கிடைக்கும் திருபாகம் என்ற ஸ்வீட்ஆகும். இதை செய்வதும் ஈசி.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை மாவு
முக்கால் கப் முந்திரி பருப்பு
சர்க்கரை – 1 ½ கப்
பால் 1 கப்
குங்குமப் பூ சேர்த்த பால்
¾ கப் நெய்
செய்முறை : கடலை மாவை வறுக்க வேண்டும். வறுத்த பிறகு சலித்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு மிக்ஸியில் முந்திரி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வையுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கரைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து அடுப்பை ஆன் செய்ய வேண்டும். தற்போது நன்றாக கிளர வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் நெய்யில் ஒரு பாதியை சேர்த்து கிளரவும். சுமார் 15 நிமிடங்களாவது கிளர வேண்டும். தற்போது அல்வா பதத்திற்கு வரும். அப்போது குங்குமப் பூ சேர்த்த பாலை சிறிய அளவில் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து இதில் அரைத்த முந்திரி பொடியை சேர்த்து கிளரவும். கடைசியாக எல்லா நெய்யையும் சேர்த்து கிளர வேண்டும். சுப்பரான திருபாகம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“