கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
குனியமுத்தூர் சரஸ்வதி இராமச்சந்திரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளியின் தாளாளர் அந்தான கோபால், அறங்காவலர்கள் ரவீந்திரன், சுதர்ஷன், பள்ளியின் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதற்கு பலரும் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
செய்தி - பி.ரஹ்மான்