ரொம ருசியான திவாதிரை களி, இப்படி செய்யுங்க. சூப்பரான ஸ்வீட் .
தேவையான பொருட்கள்
1 கப் இட்லி அரிசி
1 ½ கப் வெல்லம்
2 கப் தண்ணீர்
ஆரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி
3 ஸ்பூன் நெய்
7 முந்திரி
செய்முறை : இட்லி அரிசியை நன்றாக கழுவி, அதை அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து வெல்ல பாகை வடிகட்டி கொள்ளவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மாவு அரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிளரினால், களி பதம் வரும். அப்போது பாகு சேர்த்து கிளரவும். சிறிய அளவில் நெய் சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து கிளர வேண்டும். வறுத்த முந்திரி சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“