50 வயதில் காதல் திருமணம்... இந்த பெண்மணி செய்தது சரியா? தவறா?

இப்போதும் என் பிள்ளைகள் வந்து அழைத்தால் கூட நான் செல்ல தயார். ஆனால்,

’காதல்’ என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒரு உணர்வு. இந்த காதலுக்கு வயது வரம்பு இருக்கிறதா என்றால் அதற்கு பதில்லை.காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது

இப்படி காதலால் நாமும், நம்மாள் காதலும் ஒருபுறம் வாழ்ந்துக்  கொண்டிருக்க 50 வயது பெண்மனி ஒருவர் தனது இரண்டாவது திருமணத்தை பற்றி  இன்றைய பெண்களுக்கு ஒரு நவீன கருத்தை பகிர்ந்துள்ளார்.

“என் பெயர்  கோமாலா. எனக்கு வயது 50.  சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டேன்.  அதிர்ச்சியடைய  வேண்டாம்.  இது வெரு காமத்தை தேடி மட்டுமே, நான்  தேடிக்  கொண்ட உறவு என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் தவறு.  என்னுடைய 25 வயதில், என் கணவர் விபத்தில் மரணமடைந்தார்.

அப்போது எனக்கு 3 குழந்தைகள். என்ன செய்வதென்றே தெரியவில்லை.  ஐவெஸ்ஸில் சின்னதாக தள்ளு வண்டி கடைப் போட்டு பிழைப்பு நடத்தினேன். அதில் வரும் வருமானத்தை வைத்து என் மூன்று பிள்ளைகளை கல்லூரி வரை படிக்க வைத்து, அவர்களை நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தேன்.

அன்று  தான் முதன்முதலாக  அவர் என் ஹோட்டலுக்கு வந்தார். என் கையால் உணவு பரிமாறினேன். சாப்பிட்டு விட்டு  நீண்ட நாளைக்கு பிறகு என் தாயின் கைகளால் சாப்பிட்டது போல் இருந்தது என்று கூறி விட்டு சென்றார், அதன் பிறகு  தினமும் என் கடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒரு நாள் என்னிடம் வந்து, என்னை காதலிப்பதாக சொன்னார்.  என்னால் நம்ப முடியவில்லை. என்னையும் என் பிள்ளைகளை சொந்த மக்களை போல் பார்த்துக் கொள்வதாக கூறினார். அதை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். நானோ விதவை. பிள்ளைகள் இருக்கின்றனர். வயதோ 50. இந்த திருமணத்தை ஊர் எப்படி ஏற்றுக்  கொள்ளும்? இப்படி  பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

அடுத்த நாளே நான் ஊரை காலி செய்துக் கொண்டு  வேறு இடத்திற்கு வந்து விட்டேன். என்னை தேடி அவர் பல இடங்களில் அலைந்தார். அதன் பின்பு, ஒரு நாள் எப்படியோ நான் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து அங்கு வந்தார். நான் என்ன தவறாக கேட்டேன்?  பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லி இருக்களாமே? ஏன் என்று அவர் தரப்பு கேள்விகளை கேட்டார்.

நான் பதில் சொல்லாமல் யாரேனும் பார்க்கிறார்களா? என்று சுற்றி  பார்த்தேன். அப்போது தான் என் மகன்களில் ஒருவன் இதைப் பார்த்து விட்டான். துடி துடித்து போனேன். நெஞ்சில் இனம் புரியாத பயம்.  என் மகன் என்னைப் பற்றி என்ன நினைப்பானோ, அம்மா என்று இனிமே அழைப்பானா? என்றெல்லாம் நினைத்து கலங்கின.

அன்று இரவு, வீட்டில்  புயல் வீசியது. தன் தாய் அப்படிப்பட்டவள் இல்லை என்று சற்றுக் கூட சிந்திக்காத என் மூன்று பிள்ளைகளும் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்தினர். இனிமேல் இந்த தாயின் தேவை அவர்களுக்கு தேவை இல்லையாம். என்னை அவர்களின் அம்மா என்று சொல்வதற்கு கூட  அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லி என்னை நடு இரவில் வீட்டை விட்டு அனுப்பினார்கள்.

அடுத்தடுத்து என்ன, தற்கொலை தான் முடிவு என்று சென்றேன். அப்போது தான் ஒரு குரல் மீண்டும் ஒலித்தது. என் ஒட்டு மொத்த வாழ்க்கையும் புரட்டிப் போட்ட அந்த குரல் “என்னை திருமணம் செய்துக்  கொள்வீர்களா?” அப்படி இந்த 50 வயது கிழவிடம் என்னத்தான் இருக்கிறது என்று என்னை துரத்துகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த குரல் சொன்ன பதில், முதலில் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் பிறகு சொல்கிறேன் என்றது.  இதோ நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். என்னை ஒரு அம்மா போல், தோழி போல்,  அலோசகர் போல் என் கணவர் வழி நடத்துகிறார். சின்னதாக ஹோட்டல் வைத்துள்ளோம்.  எங்களால் முடிந்த வரையில் ஏழை பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு உதவுகிறோம்.

இந்த நிமிடம் வரை அவரின் வயது, பெயர், ஜாதி எதுவும் எனக்கு தெரியாது. எங்கள் உறவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலையில்லை.  நான் சாகும் போது என் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இறுதியாக ஒரு உயிர் இருக்கும் என்றால் அது இவர் தான். இப்போதும் என் பிள்ளைகள் வந்து அழைத்தால் கூட நான் செல்ல தயார்.  ஆனால்,  அவரையும் அவர்கள் ஏற்றுக்  கொண்டால்…

நாங்கள் இருவரும் இப்போது ஒரு அன்னப்பறவை போல் வாழ்ந்து வருகிறோம்.  காமத்தை பிரித்தெடுத்து காதலை மட்டுமே கொண்டிருக்கிறோம்”

இப்போது சொல்லுங்கள் நான் செய்தது சரியா? தவறா?…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close