பொதுவாக, நாம் அனைவரும் 2 கண்களுடன் உலகத்தைப் பார்க்கிறோம். ஆனால் இயற்கையில், சில உயிரினங்கள் இந்த எண்ணிக்கையை மீறி, 3, 8, 10 அல்லது நூற்றுக்கணக்கான கண்களுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இது அறிவியல்கதையைப் போல் தோன்றினாலும், இவையனைத்தும் இயற்கையின் தனித்துவமான வடிவமைப்பின் அங்கமே. இந்த கூடுதல் கண்கள் விலங்குகள் உயிர்வாழவும், ஆபத்தைக் கண்டறியவும், சூரியஒளியை உணரவும், தங்கள் சுற்றுப்புறத்தில் வழிநடத்தவும் உதவுகின்றன. உலகை பார்க்கும் விதம் சற்றே மாறுபட்ட சில கண்கவர் உயிரினங்களை இங்கே பார்ப்போம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பல்லிகள், தவளைகள், மற்றும் சுறாக்கள் போன்ற பல ஊர்வனவற்றிற்கு பரைட்டல் கண் எனப்படும் "3-வது கண்" தலையின் உச்சியில் இருக்கும். இது நாம் பார்க்கும் கண்களைப்போல காட்சிகளைப் பார்க்காது. மாறாக, ஒளி மற்றும் இருளைக் கண்டறிந்து, பகல் நீளம், பருவங்கள் மற்றும் உடல் வெப்பநிலை சீராக்கம் போன்றவற்றை உணர விலங்குக்கு உதவுகிறது. நியூசிலாந்தின் அரிய ஊர்வனமான டுவாடாரா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. டுவாடாரா குட்டிகள் தலையின் மேல் சிறிய, தெரியும் மூன்றாவது கண்ணுடன் பிறக்கின்றன. அவை வளரும்போது, இந்தப் பகுதி தோலால் மூடப்பட்டாலும், ஒளி உணர் உறுப்பு உள்ளேயே தொடர்ந்து செயல்படும்.
நிறைய கண்கள், சிறந்த பார்வை?
3 கண்கள் ஆச்சரியப்படுத்தினால், முதுகெலும்பில்லாத சில உயிரினங்களின் கண்கள் இன்னும் வியக்க வைக்கும்.
சிலந்திகள்: பெரும்பாலான சிலந்திகளுக்கு 8 கண்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில கண்கள் அசைவிற்கும், மற்றவை ஆழமான பார்வை அல்லது இரவு பார்வைக்கும் உதவுகின்றன.
குதிரை லாட நண்டுகள்: இந்த பழங்கால கடல்வாழ் உயிரினங்களுக்கு அவற்றின் உடல் முழுவதும், அவற்றின் வால்களிலும் கூட 10 கண்கள் உள்ளன. இது சகதியான கடல் தளங்களில் வழிநடத்தவும், துணையைத் தேடவும் உதவுகிறது.
பெட்டி ஜெல்லிமீன்: இந்த ஜெல்லிமீன்கள் கிட்டத்தட்ட நீந்தும் கண்களைப் போன்றவை. அவற்றுக்கு கொத்துக்களாக 24 கண்கள் உள்ளன, மேலும் அவற்றில் சில தெளிவான உருவங்களையும் உருவாக்கும்.
கைட்டான்கள்: இந்த கடல்வாழ் மெல்லுடலிகளுக்கு அவற்றின் ஓடுகளிலேயே நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கண்கள் உள்ளன. இந்த கண்கள் மிகவும் எளிமையானவை; உருவங்களை உருவாக்காது, ஆனால் நிழல்களைக் கண்டறிந்து கைட்டான்கள் பாதுகாப்பாக இருக்க உதவும்.
ட்ரையோப்ஸ்: சில சமயங்களில் "டைனோசர் இறால்" என்று அழைக்கப்படும் ட்ரையோப்ஸ், அதன் 2 முக்கிய கண்களுடன் ஒரு தெரியும் 3-வது கண்ணையும் கொண்ட சிறிய ஓடுடைய மீன் வகையாகும்.
ஏன் இத்தனை கண்கள்? இந்த கூடுதல் கண்களுக்கு ஒரு காரணம் உள்ளது. ஒவ்வொரு விலங்கும் அதன் கண்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தி அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. ஊர்வனவற்றிற்கு, அந்த மூன்றாவது கண் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களை உணர்வதற்கும் உதவுகிறது. சிலந்திகள் மற்றும் நண்டுகளுக்கு, அதிக கண்கள் இருப்பது பரந்த காட்சி வரம்பைக் கொடுக்கிறது. இது இரையாகவும், வேட்டையாடுபவராகவும் இருக்கும்போது மிகவும் பயனுள்ளது.
ஜெல்லிமீன் மற்றும் கைட்டான்களுக்கு, அந்த அனைத்து கண்களும் நம்மைப் போல சிக்கலான மூளை இல்லாமல் உயிர்வாழ உதவுகின்றன.சில விலங்குகள் தங்கள் கண்வடிவமைப்பை இன்னும் மேம்படுத்துகின்றன.டைவிங் பீட்டில் லார்வாவுக்கு 12 கண்கள் உள்ளன. இவை இரட்டை விழித் திரைகள் மற்றும் பைஃபோகல் லென்ஸ்களுடன், இயற்கையின் மிகச் சிக்கலான காட்சி அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.
இறுதியாக, மேண்டிஸ் இறால் உள்ளது. புற ஊதா, துருவப்படுத்தப்பட்ட ஒளி, மற்றும் 12 முதல் 16 வெவ்வேறு வண்ண ஏற்பிகளைப் பார்க்கும் கண்களுடன், இது கிரகத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு கண்ணிலும் 3 பகுதிகள் உள்ளன, அதாவது இது தொழில்நுட்ப ரீதியாக உலகை ஒரே நேரத்தில் மூன்று கோணங்களில் இருந்து பார்க்கிறது.