அடேங்கப்பா ஷாட்ஸ்! அழகிய புகைப்படங்கள்! போட்டோகிராபருக்கு சபாஷ்!

பிரேசிலை சேர்ந்த புகைப்பட கலைஞர், ‘இடம் மற்றும் புகைப்படம்’ என்ற தலைப்பின் கீழ்எடுத்த புகைப்படங்கள இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

ஒரு புகைப்படம் அழகாக வருவதற்கு அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள், இடம் மட்டும் போதாது. புகைப்பட கலைஞர்களின் பொறுமை, அந்த புகைப்படம் அழகாக வருவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கோணம் ஆகியவை மிக மிக முக்கியம். அப்போதுதான், நம் வாழ்வின் அழகிய தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நம் வாழ்நாளில் அழியாத நினைவாக பதிந்திருக்கும். அதிலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடந்து புகைப்படங்கள் சொதப்பிவிட்டால், காலத்திற்கும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கும்.

பிரேசிலை சேர்ந்த புகைப்பட கலைஞர் கில்மர் சில்வா என்பவர், ‘இடம் மற்றும் புகைப்படம்’ (Place and Photo) என்ற தலைப்பின் கீழ் தான் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அந்த புகைப்படம் எடுக்கப்படுவதர்கு முன் அவர் வைத்த கோணம், அந்த இடம் ஆகியவற்றின் புகைப்படங்களையும் உடன் இணைத்துள்ளார். பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றும் அவரது புகைப்படங்களையும், அதற்கு பின்னால் உள்ள அவரது உழைப்பையும் பாருங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close